பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யஹோவா என்ற பெயர் இச்சொல்லிலிருந்துதான் தோன்றியது. வசந்தகால விழாவின்போது பாபிலோனியாவில் மெரோடாக் ஒரு புருவை இரண்டாக வெட்டினன் என்ற புனைகதையின் அடிப்படையில் ஒரு சடங்கு பண்டைய பாபிலோனியாவில் கொண்டாடப்பட்டது. அந்தப்புரு இயாஹூவைக் குறிக்கும் தியாமத்தின் உடலை இரண்டு கூருக வெட்டி உலகையும், வானத்தையும் மெரோடாக் படைத் தான் என்ற பாபிலோனியப் புனைகதையோடு இச்சடங் கிற்குத் தொடர்புள்ளது. 1. இக்கதை புனைந்தவர்களது சமூகநிலை தாய்வழிச் சமுதாய நிலையே என்பது உறுதி. கிரேவ்ஸ் கூறும் விளக்கத்தைக் கண்டோம். கார்டன் சைல்ட், நியோவிதிக் A, நியோலிதிக் B என்ற பண்பாட்டுநிலை முதலே கிரேக்கத் தின் பண்பாடு காணப்படுகிறது, பாலியோலிதிக் இல்லை என்கிரு.ர். அது மட்டுமல்லாமல் நீண்டகாலமாக மேய்ச்சல் விவசாயப் பண்பாட்டு நிலைகள் பிரியவில்லை என்றும் கூறுகிரு.ர். எனவே தாய்வழிச் சமுதாயம் வேறு சமுதாயங்களோடு போராடாமல் வாழ்ந்த காலத்தில் இக்கதை தோன்றியிருத்தல் வேண்டும். 2. இரண்டாவது கிரேக்கப் படைப்புக் கதையொன்று ஹோமர், ஆர்பியூஸ் என்னும் கவிஞர்களால் இலியாதிலும் ஆர்பியூஸின் கவிதைகளிலும் குறிக்கப்படுகிறது. எல்லாத் தேவர்களும், ஜீவராசிகளும் ஒவியானஸ் என்னும் உலகைச் சுற்றி ஒடும் நீரோட்டத்தில் தோன்றின என்றும் டெதிஸ் என்னும் தெய்வம், ஒசியானஸ் என்னும் தேவனது குழந்தைகளின் தாயென்றும் கூறுகிருர்கள். ஆளுல் ஆர்பியூஸின் கவிதைகளில் nயூஸ் என்னும் தேவர்க் கரசன் கூட அஞ்சி நடுங்கும் வல்லமையுடைய கறுப்புச் சிறகுடைய இருள் என்னும் தேவியைக் காற்று காதலிக்க அக்காதலின் விளைவாக ஒரு வெள்ளி முட்டையை அவளுடைய 1 9