பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருப்பையில் வைத்தான் என்றும், அம்முட்டையிலிருந்து ஈராஸ் என்னும் காதல் தேவன் பிறந்து உலக இயக்கத்தை துவக்கி வைத்தான் என்றும் அவர் கூறுகிருர், ஈராஸ் ஆணும் பெண்ணுமான உறுப்புடையவன்; தங்கச் சிறகுகள் உடையவன்; நான்கு தலைகளையுடையவன். சில வேளைகளில் கானேயைப் போலவும், சில வேளைகளில் சிங்கத்தைப் போல வும் கர்ச்சிப்பான். சில வேளைகளில் ஆட்டைப் போலவும் கத்துவான். இரவுத் தேவி அவனுக்கு மூன்று பெயரிட்டாள். இரவில் மூன்று வடிவமாக அவள் அவனுக்குத் தோன்று வாள். அவ்வடிவங்கள் இரவு, ஒழுங்கு, நீதி என்பன. அவர்களது குகையின் முன் ரீயா என்ற தேவி ஒரு வெண்கல முரசை முழக்கிக் கொண்டு காவல் காத்தாள். இத்தேவியின் சாலினிகள் இங்கிருக்கிருர்கள் என்பது முரசு முழக்கத்தின் பொருள். பானஸ் என்ற இருளின் மகன் உலகம், வானம், சூரியன், சந்திரன் முதலிய பொருள்களைப் படைத்தான். ஆயினும் மும் முகம் உடைய இருள்தேவி உலகையாண்டு வந்தாள். அவளுக்குப் பின் யூரானஸ் செங்கோல் செலுத்தினன். இக்கதையில் முதல் கதையின் வளர்ச்சியைக் காண்கி ருேம். இருள்தேவி, யூரோ நோமை ஒத்திருக்கிருள். ஆர்போன் என்ற பாம்பிற்குப் பதில் ஒஷியானஸ் அவளை அனேக்கிருன் ஒஷியானஸ் கடலாகும். மிகப் பிற்காலக் காதல் தெய்வம் மிகப் பழைய படைப் புத் தெய்வத்தின் மகளுக்கப் பட்டு அவனே உலகைப் படைப் பவளுகக் கூறப்பட்டுள்ளான். இருள் தேவியின் மும்முகமும் அதனுடைய பொருளும், வளர்ச்சியடைந்த ஒழுங்கு நீதிக் கருத்துக்கள் கொண்ட சமுதாயத்தில் வாழும் மனிதருடைய சிந்தனைகள். இரவின் வெள்ளி முட்டை சந்திரன், சந்திரனைப் பற்றிப் பல புனைகதைகள் தோன்றிவிட பழைய படைப்புக் கதையில் அவனைப் புகுத்தியுள்ளனர். இந்த வளர்ச்சியடைந்த கதையில் முதல் கதையைவிட படைப்பில் ஆணின் பங்கு அதிகமாகிக் காட்டப்பட்டுள்ளது. 翠器综