பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆயினும் இருள் தேவியே உலகை ஆளுகிருள். அவளுடைய காவல் தெய்வமும் சாலினிகளும் பெண்களே. ஆனல் கதை புனேயப்படும் பொழுது யூரானஸ் என்ற ஆண் தெய்வம் உலகத்தை ஆளும் தெய்வமாக கருதப்பட்டது. எனவே அக்கருத்து தந்தைவழிச் சமுதாயமும் தாய்வழிச் சமுதாய மும் இணைந்ததையே குறிப்பிடுகிறது. ஆளுல் போர்கள் எதுவும் நிகழவில்லை. முதல்கதையில் யூரிநோம், ஒபியோனைத் தலையில் மிதித்து ஒரு குகைக்கு விரட்டினுள் என்றிருக்கிறது. இக்காலத்தில் ஏற்பட்ட முரண்பாட்டிற்குப் பின் தாய் வழிச் சமுதாயமும், தந்தைவழிச் சமுதாயமும் சமாதானமாக இணைவதாகத் தோன்றுகிறது. இந்தச் சமுதாய மாற்ற நிலைமைகளில் கிரேக்கர்கள் இக் கற்பனைக் கதைகளைப் படைத் திருக்க வேண்டும். 3. ஆதிகாலத்தில் பூமித்தாய் குழப்பத்திலிருந்து தோன்றி உறங்கும் பொழுதே பூரானலைப் பெற்றெடுத் தாள். அவன் வானத்திலிருந்து அவளை அன்போடு நோக்கி அவளுடைய இரகசியமான பள்ளத்தாக்குகளை நோக்கி மழை பொழியச் செய்தான். அவள் புல், பலர், மரம், விலங்குகள், பறவைகள் முதலியவற்றை இடத்திற்கேற்பப் பெற்றெடுத் தாள். இம்மழைகே ஆறுகளேயும், கடல்களையும் உண்டாக் கியது. அவளுடைய முதற் குழந்தைகள் அரைகுறை மனித உருவமுடையவர்களாக இரு ந் த னர். பிரையேரியஸ். கைகெஸ், காட்டுஸ் என்ற நூறு கைகளையுடைய அரக்கர்கள் பிறந்தனர். பின்னர் ஒற்றைக் கண்ணுடைய சைக்ளாப்ஸ் என்னும் அரக்கர்கள் பிறந்தனர். இவர்கள் பெரிய சுவர் களைக் கட்டினர்கள். இரும்பு வேலே செய்யும் கொல்லர்க ளாகவும் இருந்தார்கள். இவர்களைத் தான் ஒடிஸியூஸ் விவிலியில் பார்த்தான், அம்மூவரின் பெயர்கள் பிரான்டீஸ், ஸ்டீரோப்ஸ், ஆர்கெஸ் இவர்களுடைய ஆவிகள் எட்ன எரிமலையின் குகைகளில் இருந்தன. அப்பாலோ அவைகளைக் கொன்ருன், 43?