பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒலிம்பிய மலை சமயத்தில் தந்தைவழிச் சமுதாயப் புனை கதையான யூரானஸின் கதை புகுந்து விட்டது. யூரானஸ் என்ற சொல்லுக்கு வானம் என்பது பொருள். வருணன் என்னும் ஆரிய தேவளுேடு யூரானஸ் இணைக்கப்பட்டான். அவனே முதல் தந்தை யென்று நம்பப்பட்டான். கிரேக்க மொழியில் பூரானஸ் என்னும் சொல் பூரான என்னும் பெண்பால் பெயரின் ஆண்பால் சொல்லாகும். யூரான என்ருல் மலேராணி. கோடை யின் தேவி, காற்றுத் தேவி, காட்டுமாடுகளின் தெய்வம் என்பது பொருள். யூரான் என்ற பெண் தெய்வம் தான் ஆளுதிக்க சமுதாயத்தில் பால் மாற்றப்பட்டது. ஆண் தெய்வமாக கருதப்பட்டிருத்தல் வேண்டும். ஹெலனிக் நாகரிகமுடைய இனக்குழுக்கள் வட கிரேக்கத்தின் மீது படையெடுத்து வந்த நிகழ்ச்சியைக் குறிப் பிடும் ஒரு புனைகதை யூரானஸ் பூமா தேவியை மணந்து கொண்டான் கான்று கூறுகிறது. அவனே முதல் தந்தை யென்றும் கூறுகிறது. ஆணுல் அவனே பூமாதேவியின் மகன் என்ற புனேகதை இதனுேடு முரண்படுகிறது. இது தாய் வழி இனக்குழு மக்களும் தந்தை வழி ஹெலனிக் இனக்குழு மக்களும் போராடிய காலத்திற்குப் பின், பண்பாட்டு இணைப்பாகத் தோன்றிய கதை. இதில் படைப்பின் முதல் தெய்வமாகப் பூமி தேவி கூறப்பட்ட போதிலும், அவளுடைய மகனே அவளது கணவனுகி, உலகில் தாவரங்களேயும் உயிரினங்களே:பும் படைத்தான் என்று கூறப்படுகிறது. நூறு கையுடைய அரக்கர்கள் தாய்வழிச் சமுதாயத்தின் கைத்தொழிலாளர்கள் என்பதும் அவர்களால் வலிமை பெற்றதாய் வழிச் சமுதாயத்தை அழிக்க அவர் களுடைய பகைவர்களின் கொலைச் செயல்கள் இப்பு:ன. கதையில் அப்பாலோ என்ற ஹெலனிக் ஆண் தெய்வத்தின் ஆண் செயலாகவும் கூறப்பட்டது. 4. நான்காவது கதை ஒரு தத்துவ ரீதியான படைப்புக் கதை. இது புனே கதையாக இல்லாமல் வளர்ச்சியடைந்த தத்துவ-சமயக் கருத்தாக இருப்பதால் இதனை நாம் ஒதுக்கி விடலாம், 122