பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனி பைபிளில் கூறப்படும் யூதர்கள் அல்லது இஸ்ரவேலர்களின் படைப்பு வரலாற்றைக் கவனிப்போம். இக்கதையின் தேவன் ஆவியாக அசைந்தாடி வானேயும் கடலையும் பிரித்தார். சூரியன், சந்திரன், நட்சத்திரங்களைப் படைத்தார். தாவரங்களையும், விலங்குகளையும், பறவை களையும் படைத்தார். கடைசியில் தன்னுருவத்தில் மனிதனைப் படைத்தார். மண்ணுல் உருவம் செய்து அதில் தனது மூச்சை ஊதினர். முதல் மனிதன் ஆதாம் உயிர் பெற்ருன். இக் கதையைப் புனைந்தவர்கள் தந்தை வழிச் சமுதாயத் தைச் சேர்ந்தவர்கள். இஸ்ரவேலர்கள் பைபிள் வருணனைப் படி மேய்த்தல் தொழில் உடையவர்கள். ஆணுதிக்க சமுதா யத்தின் கற்பனையின்படியே இவர்கள் பெண்ணின் பாத்திர மில்லாமல் உலகு படைக்கப் பட்ட கதையைப் புனைந் தார்கள். அது மட்டுமல்ல. ஒரே ராஜ்யமாக, ஓர் அரசனின் கீழ் ஒன்று திரண்டு பகைவர்களே எதிர்த்ததால் தான் இவர்கள் ஒரே கடவுள்' என்ற பண்பாட்டுச் சிந்தனே யுடையவர்களாயிருந்தனர். இவர்களுடைய இனத்திற்கு தாய்வழிச் சமுதாயத்தின் முற்காலம் இல்லாததால் படைப்புக் கதையில் தாயின் தேவையே ஏற்படவில்லே. வேதத்தில் முக்கியமாகக் கடவுளர்களே போற்றப் படுகிரு.ர்கள். முக்கிய கடவுளர்கள் இந்திரன், மித்ரன், வருணன், ருத்ரன், அக்னி இவர்களனைவரும் ஆண் ஆற்ற லுடைய தேவர்களே. சூரியனும் ஆண் தெய்வமே. பெண்கள் ஆண் தெய்வங்களின் மனைவிமார்களாகவே இரண்டாந்தர மதிப்புப் பெறுகிரு.ர்கள். வேதகால ஆரிய கணங்களின் சமூகப் பண்பாட்டு நிலை பற்றியும், அத்திலையில் எழுந்த தெய்வக் கருத்துக்கள் பற்றியும் பின்னர் காண் உோம். அதற்கு முன் ரிக் வேதத்தில் புருஷ சூக்தத்தில் கூறப் படும் உலகப் படைப்பு பற்றிக் கூறுவோம்.