பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"புருஷன்' என்ற பெயரே ஆணேக் குறிக்கும். அவனைப் பற்றி ரிக் வேதம் கூறுவதாவது : புருஷனுக்கு ஆயிரம் தலைகள், ஆயிரம் கண்கள், ஆயிரம் கால்கள், உலக முழுவதிலும் பத்து விரற்கடை இடத்தை அவன் உருவம் அடைத்துக் கொள்ளும். இப்புருஷனே இப் பொழுது இருக்கும் எல்லாமாகவும் இனி வரப்போகும் எல்லாமாகவும் இருக்கிருன். அழிவில்லாத அவன் உணவால் பெருக்கமுற்று இருக்கிருன். அவனது பெருமை உயர்ந்தது. அதனினும் பெரியவன் புருஷன். முக்கால் பங்கு புருஷன் மேலே போய் விட்டான், கால் பங்கு இங்கேயிருக்கிருன். தின்பது, தின்னதது எல்லாவற்றின் பக்கத்திலும் அவன் நடந்தான்.” இவ்வாறு புருஷனை வருணித்து விட்டு, அவனைத் தேவர்கள் பலியிட்டதாகவும், அவனுடைய உடலின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் சூரியன், சந்திரன் முதலிய கோளங்களும் உலகமும், விலங்குகளும், பிராம்மண, க்ஷத்தி ரிய, வைசிய, சூத்திரங்களும் தோன்றியதை இப்புருஷ சூக்தம் விவரிக்கிறது. வேதத்தில் ஆளுதிக்கக் கருத்து வன்மையாகக் காணப் படுகிறது. பிரபஞ்ச முழுவதும் முதல் ஆணினின்றும் தோன்றியதாக இந்நூல் கூறுகிறது. இது ஏன்? 'அவர் களுடைய பொருளாதார அமைப்பை மீறி அவர்களுடைய கற்பனை செல்ல முடியாது. புருஷசூக்தத்தில் சூசுட்ம சிந்தனை சிறிதளவு உள்ளது. ஆயினும் அச்சிந்தனை மாடு மேய்ப்பவர்களின் சமூகத்தில் வாழ்பவர்களது சிந்தனை யாகவே உள்ளது, அவர்கள் ஆண்களின் உயர்வில் நம்பிக்கையுடையவர்கள்.” எனவே படைப்பிலும் ஆணைப் பலி கொடுத்து உலகம் உண்டாக்கப்பட்டதாகக் கருதி ஒரு கற்பனைப் புருஷனது புனைகதையை உலகப் படைப்பை விளக்கப் படைத்தார்கள். பிற்கால நாராயணப் படைப்புக் கதைகளும் ஆணுதிக்கக் கருத்தையே வெளியிடுகின்றன. நாராயணன் வேத 134