பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அல்லது தந்தை வழி அல்லது தாய்வழி உரிமைகள் எவ்வாறு தோன்றுகின்றன என்பது பற்றி பல சமூகவியல் அறிஞர்கள் விளக்கியுள்ளனர். அவர்களுள் தாம்ஸன் கூறுவதை இங்கே கவனிப்போம், "ஈட்டி கண்டு பிடிக்கப்பட்டபின் வேட்டையாடுதல் ஆண்களின் தொழிலாயிற்று. பெண்கள் உணவை சேகரிக் கும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இவ்வாறு ஆண்-பெண் பாலாரிடையே வேலைப் பிரிவினை இருந்து வருவதை எல்லா வேட்டைச் சமுதாயத்தினரிடையேயும் இன்றும் காணலாம். பெண்கள் கருவுற்றிருக்கும் காலத்தில் அலேக முடியாததால் இயற்கையிலேயே இத்தகைய வேலைப் பிரிவினை ஏற்பட்டது. வேட்டையிலிருந்து விலங்குகளைப் பழக்கி வளர்க்கும் தொழில் தோன்றியது. வேட்டையில் கொல்லுவதற்குப் பதில் விலங்குகளைப் பிடித்து கொணர்ந்து வளர்த்தார்கள். ஆடு,மாடு வளர்த்தல் வேட்டையாடிய ஆண்களின் தொழில் களாகவே இருக்கின்றன. உணவு தேடுதலிலிருந்து, குடி யிருப்பின் அருகில் விதைத்துப் பயிரிடும் தொழில் தோன்றி யது. எனவே தோட்டப் பயிர் செய்தல் பெண்களின் வேலை யாகவே இருந்தது. கலப்பையை உழுவதற்குப் பயன் படுத்தத் தொடங்கிய காலத்தில் இருந்து விவசாயம் ஆண் களின் தொழிலாயிற்று. ஆப்பிரிக்காவில் கலப்பையைப் பயன் படுத்தியுள்ள இனக்குழு சமுதாயங்களில் இன்றும் இம். மாறுதல் நிகழ்ந்து வருவதைக் காணலாம். ஆண் பெண் சமூக உறவுகள் உற்பத்தி முறை மாற்றங் களுக்கு ஏற்றபடி மாறுகிற பொழுது தந்தை வழி உரிமை முறை வலுப்படுகிறது. இச் செயல்பாட்டு முறை வேட்டை யாடுதலோடு தொடங்குகிறது. ஆடுமாடு வளர்த்தலோடு வலுப்படுகிறது. ஆளுல் ஆரம்பகால விவசாயத்தோடு தாய் வழிக்குத் திரும்புகிறது. - 盈器香