பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்பத்தில் தாய்வழி உரிமை முறை இருந்ததென்ருல் மிகவும் பின் தங்கிய மக்கள் தாய்வழி முறையையும், அவர் களைவிட முன்னேறிய மக்கள் தந்தை வழி முறையையும் பின் பற்றுகிருர்களே, இது ஏன் என்று கேட்கலாம். இதற்கு விடையாவது : வேட்டைப் பொருளாதாரம் தந்தையுரி மையை ஏற்படுத்தும் தன்மை வாய்ந்தது. இன்றும் பல வேட்டைச் சமுதாய இனக்குழு மக்கள் தந்தை வழியினராக இருப்பதற்குக் காரணம் அவர்களுடைய சமுதாய வளர்ச்சி அந்நிலையில் தேங்கியிருப்பதேயாகும். வரலாற்று முற்காலத் தில் விரைவாக வேட்டைச் சமுதாயத்திலிருந்து விவசாய சமுதாயத்திற்கு மாறிய குழுக்களில் தாய்வழி உரிமை, அச்சமுதாயம் மாற்ற மடைந்த பின்னும் தொடர்ந்து நீடித்தது” இது குறித்து தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா கூறுவதாவது : ஆண் பெண், உயர்வு தாழ்வுகளுக்குக் காரணம் பொருளாதார வாழ்க்கையின் வளர்ச்சியே. வேட்டைக்கு (ஈட்டியைப் பயன் படுத்துதல்) முற்கால சமுதாய நிலையில் தாயுரிமை இருந்தது. வேட்டை வளர்ச்சி பெற்றபோது ஆண்களுக்குச் சமூகத்தில் உயர்வு ஏற்பட்டது. வேட்டைச் சமுதாயம் ஆடுமாடு வளர்ப்பு சமுதாயமாக மாறியபின் பெண்ணுக்குச் சமூகத்தில் உயர்வு ஏற்பட்டது. அதளுல் தாய் வழி உரிமை மீண்டும் அவர்களிடையே தோன்றியது. காளைகள் இழுக்கும் கலப்பையைப் பயன்படுத்தி நிலத்தை உழும் பயிர் தொழில் தோன்றிய பின் தாயுரிமை முற்றிலும் மறைந்து விட்டது. ஆயினும் அதன் எச்சங்களைத் தந்தையுரி மைச் சமுதாயத்தில் காணலாம்”, ‘'தேவர்களும், தேவிகளும் மனித உருவில் மனித சிந்தனையால் படைக்கப்பட்டவர்களே. ஆண் பெண்பாலரின் தராதர உயர்வு தாழ்வுகள் மாறின. வேட்டை, ஆடு மாடு வளர்த்தல் ஆகிய தொழில்களே அடிப்படையாகக் கொண்ட சமுதாயங்களில் ஆண் ஆதிக்கம் இருந்தது. அச்சமுதாயங் 127