பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களில் மக்களால் வணங்கப்பட்ட தெய்வங்கள் ஆண்களாகவே இருந்தன. ஆரம்பகால விவசாய சமுதாயங்களில் பெண் ஆதிக்கம் இருந்ததால் அச்சமுதாயங்களில் பெண் தெய்வங் களே ஏற்றம் பெற்றன”. இவ்வாறு சமுதாய மாற்றங்களால் ஏற்பட்ட சிந்தனை மாற்றங்களால் படைப்புக் கதைகளிலும் கதை மாந்தர்கள் ஆண் அல்லது பெண்ணுக இருப்பதைக் காணலாம். மேலே உதாரணங்களாகக் காட்டிய மிகப் பழைய வரலாற்று முற்காலக் கதை மூலங்கள் இவ்வுண்மையை விளக்குகின்றன. இனி முக்கியமற்ற சில கூறுகளைப் பற்றி ஆராய்வோம். படைப்புக் கதைகள் பலவற்றில் பாம்பிற்கு இடமளிக்கப் பட்டுள்ளது. இது ஏன்? பாம்பு வணக்கம் என்ற நாக வணக்கம் உலகம் முழுவதி லும் காணப்படுவது. அது அச்சுறுத்தும் தெய்வமாகவும், செழிப்புத் தெய்வமாகவும், ஆண் உருவம் பெண் உருவம் ஆகிய இருபால் உருவங்களிலும் வழிபடப்படுகிறது. மிகப் பண்டைக் காலத்தில் நாக வழிபாடு இருந்ததென்பதற்கு சான்றுகள் உள்ளன. பாபிலோனியக் கதையில் படைப்பு நிகழ்ச்சியைப் பற்றிக் கூறும் கதையில் பாம்பிற்கு இடமில்லை. ஆளுல் தியாமத் மொரோடாக்கை எதிர்த்துச் செல்லும் பொழுது பெரிய மலைப் பாம்புகளைப் படைத்தாள். இதனுல் தியாமத் கதை தோன்றிய பொழுது பாபிலோனியாவில் நாக வணக்கம் முக்கியமானதாக இல்லை என்று அனுமானிக்க லாம். ஆளுல் பல குழுக்கள் தோன்றி ஒன்ருக இணையும் நிலையில் தாக வணக்கம் இருந்ததென்பது தியாமத் படைத்த விலங்குகளில் தாகமும் ஒன்றென்று படைப்புக் கதை குறிப் பிடுவதால் புலனுகிறது. நாகர் குழு தியாமத் குழுவினரோடு சேர்ந்து கொண்டதையே இக்குறிப்பு காட்டுகிறது. இது போலவே நாராயணன்-படைப்புக் கதையில் பாம்பு அவரது படுக்கையாக மட்டும் உள்ளது. இதுவும் நாராயணனை வழி பட்ட ஆடு மாடு வளர்த்த மக்கள், நாகர் வழிபாடுடையவர் களை வெற்றி கொண்டனர் என்பதைக் காட்டும். கிரேக்கக் 蠶認證