பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதையில் ஒஷியானஸ் கடல் நீரோட்டமாகும். தீவுகளில் வாழ்ந்த மக்கள் கடலையே தெய்வமாக்கி வழிபட்டதால் படைப்புக் கதையில் ஒஷியானஸ் இடம் பெறுகிருன், ப்லியிடுதலால் நன்மை உண்டாகும் என்று கருதி போலி மந்திரச் சடங்குகள் (Sympathetic Magic) செய்தல் பண்டைக் கால இனக்குழு மக்களின் சமயத்தில் முக்கிய காரணமான, அம்சமாகும். இதனால் தான் தியாமத்தின் உடலைப் பிளந்து வானையும், உலகையும் மெரோடாக் படைத்ததாகப் புனைகதையில் கற்பனை செய்யப்பட்டுள்ளது. அது தாய்வழி மக்கள் சமுதா யத்தில் தோன்றிய கற்பன. புருஷனைப் பலியிட்டு உலகம் படைக்கப் பட்டதாகக் கூறும் புருஷ சூக்தக் கதை, வேதகால மாடு மேய்க்கும் சமுதாயத்தில் வாழ்ந்த தந்தை வழிச் சமுதாயத்து மக்களின் கற்பனே. இவ்வாருக பலியிடும் சடங்கு, செழிப்புச் சடங்குகள், இனக்குறி விலங்கு வழிபாட்டுச் சடங்குகள், படைப்புக் கதை தோன்றிய காலத்தில் வளர்ச்சியடையாத மக்களிடையே பரந்திருந்தால், அரசை நோக்கியும் ஒன்று பட்ட நாட்டை நோக்கியும் முன்னேறுகிற பெரிய இனக்குழு மக்களின் படைப்புக் கதைகளில் இவைகளும் இடம் பெற்றன. இவையனைத்தையும் ஒருங்கிணைத்துப் புதிய படைப்புக் கதைகள் முற்கால மக்கள் புனேந்தது அவர்களுடைய சமுதாயம் ஒற்றுமைப்படவும் சிறு-குழுக்கள் ஒன்ருகி நாடும், அரசும் தோன்றுவதற்கு உதவுவதற்காகவே. 赛器驴