பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிமேகலையின் பெளத்தம் (மணிமேகலை பெளத்த காவியம். தருக்க நூலோ, தத்துவ நூலோ அன்று. ஆயினும் அந்நூல் எழுந்த காலத்தின் பெளத்த சமய தத்துவமும், தருக்க வியலும் அடைந்திருந்த வளர்ச்சி நிலையை அது காட்டுகிறது. இவ்வளர்ச்சியை மணிமேகலையின் இறுதிக் காதைகள் இரண்டிலும் காணலாம். இவற்றை விரிவாக ஆராய்ந்து மணிமேகலையில் விளக்கப்படும் பெளத்தம் எப்பிரிவைச் சேர்ந்தது என்று விளக்க நமது ஆராய்ச்சியாளர்கள் முயன் றுள்ளனர். சமய வழிபாட்டு முறைகளையும், வழக்கங்களையும், சடங்காசாரங்களையும் சான்று களாகக்கொண்டு மணிமேகலையின் பெளத்தப் பிரிவு எதுவென்பதை முடிவு கட்ட நமது புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர்கள் முயன்றுள்ளனா. அவர்களுள் முக்கியமானவர்கள் தெ. பொ. மீளுட்சி சுந்தரஞர், வையாபுரிப் பிள்ளை, மயிலே. சீனி.வேங்கடசாமி, உ. வே. சாமிநாதய்யர் ஆகியவர்கள். மேற்குறித்த சான்றுகள் பெளத்த சமயத்தைப் பொறுத்தமட்டில் முககியமானவை அல்ல. பல பிரிவுகளுக்கும் பொதுவான வணக்க முறைகள் உள்ளன. தததுவங் களிலும், சமயக் கோட்பாடுகளிலும் இவற் றிடையே முக்கியமான வேறுபாடுகள் உள்ளன. தத்துவ வேறுபாடுகளையும், சமயக் கோட்பாட்டு வேறுபாடுகளையும் கூர்ந்து நோக்கி, அவை எப்பிரிவு களைச் சார்ந்த கருத்துககளைத் தழுவியவை என்பதை அவர்கள் ஆராயவில்லை. இவ்வாராய்ச்சியாளர்களது க கு த் து க் களி ன் ஆதாரங்களே விமர்சித்து, தத்துவம், தருக்கம், 135