பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயக் கோட்பாடுகள் ஆகிய சான்றுகளின் அடிப் படையில் மணிமேகலையில் விளக்கப்படும் பெளத்தத் தின் பிரிவு எது, எந்த வளர்ச்சிக் கட்டத்தில் அவை இந்நூலில் விளக்கப்பட்டுள்ள என்ற முடிவுக்கு வர இக்கட்டுரையில் முயலுவேன்.1 - - தெ. பொ. மீனுட்சிசுந்தரஞர் மணிமேகலையின் பெளத்தம் தேரவாத பெளத்தம் என்று கருதுகிருர்கள். இதற்கு அவர்கள் காட்டும் சான்றுகள் வருமாறு : "மகாயன பெளத்தம் எழுவதற்கு முன்னர் புத்துருக்குக் கோயில் கட்டி வழிபடாமல் அவருடைய திருவடி நில்ைகன் மட்டும் வணங்கிய காலத்தில் எழுந்தது மணிமேகலை. அதில் காணும் மந்திர தத்திரங்கள் மகாயன பெளத்தம் தோன்று வதற்கு வழிகோலுகின்றன எனக் கூறலாம்'. ' "பெளத்த மதம் தமிழ் நாட்டில் மறைந்து விட்ட போதிலும் அக்கோள்கை தமிழோடு தமிழாய்ப் போய் விட்டது. புத்தர் திருமாலின் அவதாரமாகி விடுகிருர், சாத்தஞர், ஐயனர், தர்மராசர், போதிராசர் என்று தமிழ்நாடு வழிபடுவது பழை: புத்தரையே என்னலாம். 2 ஆளுல் தமிழ் நாட்டில் தேரவாத மன்றி வேறு பல பிரிவுகள் இருந்தன என்பதையும் தெ. டொ. மீ. அவர்கள் ஒப்புக்கொள்ளுகிரு.ர்கள். - 'பிற மதத் தி ன ரோ - ன் றி தம்முள் தாமே பெளத்தர்கள் வாதாடினர். பலப்பல பிரிவுகள் தோன்றின எனப் பெளத்த நூல்கள் விளக்குகின்றன. பின் வந்த தமிழ் நூல்களில் இச்சிறு பிரிவுகளைக் காணுேம். செளந்திராந்திகர், வைபாஷிகர், யோகாசாரர், மாத்வாத்மிகர் என்ற நான்கு பிரிவுகளைப் பற்றி மட்டுமே பேசக் கேட்கிருேம். நான்காம் நூற்றண்டில் புத்தநந்தியோடும், சாகிபுத்தரோடும் வாதிட்டு வென்ற ஞானசம்பந்தர் "அறுவகைத் தேரர் என்று கூறுகிரு.ர். அவர் காலத்திலும் பலப்பல பிரிவுகள் இருந்தமை புலளுகிறது”. 3.

  1. 35