பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கூற்றின்படி தேரவாதத்தில் ஆறு பிரிவுகளும், அவை தவிர வேறு பல பிரிவுகளும் தமிழ் நாட்டில் நான்காம் நூற்ருண்டிற்கு முன்னரே இருந்தன வென்று தெ. பொ. மீ. அவர்கள் கூறுகிரு.ர்கள். அவர்கள் குறிப்பிடும். வைபாஷிகம் செளந்திராந்திகம் இரண்டும் தேரவாதத்தின் பிரிவுகள். மற்றவையனைத்தும் அதனை எதிர்க்கும் மஹாயனப் பிரிவுகள். தமிழ் நாட்டில் பண்டைக் காலத்தில் வாழ்ந்து பெளத்த நூல்கள் எழுதிய சில ஆசிரியர்களின் பெயர் களே தெ. பொ. மீ. குறிப்பிடுகிரு.ர்கள். திக்நாகர், தருமபாலர், போதிதருமர், போன்ருேர் காஞ்சியில் வாழ்ந்ததையும் பின்னர் நாலந்தாவில் அறம் போதித்ததையும் குறிப்பிடு கிருக்கள். ஆனல் இவர்கள் எப்பிரிவைச் சார்ந்தவர்கள் என்பதை அவர்கள் குறிப்பிடவில்லை. மணிமேகலையின் பெளத்தப் பிரிவு தேரவாதம் என்பதற்கு வன்க்கமுறை ஒன்றைத்தான் அவர்கள் சான்ருகக் காட்டியுள்ளார்கள். தமிழ் நாட்டில் தத்துவப் போராட்டத்தில் ஈடுபட்ட மஹாயன, தேரவாத பெளத்தப் பிரிவுகளின் கொள்கை களில் எதனைச் சார்ந்து மணிமேகலையின் பெளத்தக் கொள்கைகள் இருக்கின்றன என்று அவர்கள் முடிவு கூறவில்லை. மயிலை. சீனி வேங்கடசாமி அவர்கள் தமிழ் நாட்டினுள் பெளத்தம் வந்த வரலாற்றை ஆராய்ந்துள்ளார்கள்.4 அசோகன் சாசனங்களிலிருந்து, தனது ஆட்சிக் கப்பாலுள்ள நாடுகளிலும் தன் அறவெற்றி பரவியிருந்ததாகக் கூறும் செய்தியை அவர்கள் சான்று காட்டி, அப்பேரரசன் காலத்தில் தமிழ் நாட்டிற்கு முதன் முதலாகப் பெளத்த பிக்குகள் வந்து அறம் போதித்தனர் என்று கூறுகிருர். அவர்கள் மேற்கோள்காட்டும் சாசனம் வருமாறு: 'தருமவிஜயம் (அறவெற்றி) என்னும் வெற்றியே மாட்சிமிக்க அரசரால் (அசோகனல்) முதல் தரமான வெற்றியென்று கருதப்படுகின்றது. இந்த வெற்றி இந்த 1.37