பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கின்றன. இதன்காலம் கி. மு. 1150. கிழக்கு மத்திய தரைக் கடல் நாகரிகத்திற்கும் தமிழரது ஆதிச்ச நல்லூர் நாகரிகத் திற்கும் பல பண்பாட்டு ஒற்றுமைகள் உள்ளன. அங்கே கிடைத்தது போன்ற திரிசூலம், இங்கும் கிடைத்தது. காவடியாடுவோர் வாயை மூடப் பயன்படுத்துவது போன்றன, தங்கவாய் மூடிகள், திரிசூலத்தில் சேவல் உருவங்களும் காணப்பட்டன. எனவே ஆரம்பக்கால முருக வணக்கம் இங்கிருந்தது என்பது K. K. பிள்ளையவர்களின் கருத்து. இங்கே திரிசூலம், கோழிஉருவம், வாய்மூடி முதலியன காணப்படினும், டியேளுேவிசைப் பற்றிக் கிடைத்துள்ள நாட்டுப் பண்பாட்டியல் வழிப்பட்ட செவிவழிக் கதைகளைப் போலவோ எழுதப்பட்ட புராணங்களைப் போலவோ முருகனைப் பற்றிய சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆதிச்சநல்லூர் ஒன்று தவிர, அவ்வளவு பழமையான சால்கோலிதிக் நாகரிகம் (கல்லும், உலோகமும் கலந்த கருவிக்காலம்) தமிழ்நாட்டில் வேறெங்கும் இல்லை. அரிக்கமேடு முதலிய தலங்கள் 1000 ஆண்டுகள் பிற் பட்டவை. அவை முற்றிலும் உலோக காலத்தைச் சேர்ந்தவை. அதற்கு முன்னர் காணப்படும் மெஞ்ஞானபுரம் நாகரிகம் நியோலிதிக் (புதிய கற்காலம்) காலத்தைச் சேர்ந்தது. காலம் கி. மு. 1500. ஆதிச்சநல்லூருக்கு முற்பட்டது. இக்காலத்திலேயே உழவுத் தொழில் அம் மக்களுக்குத் தெரிந்திருந்தது என்பதற்கு இரும்பு ஏர்க்கொழு, அரிவாள், தாழியினுள் சிறிய கலசத்தில் காணப்பட்ட உமி இவை சான்றுகள். பொருநையாற்றங்கரை அருகே சிறு குடிகளாக வாழ்ந்த இவர்கள் சிறிது உழுதும், சிறிது வேட்டையாடியும் உணவு தேடிக் கொண்டனர். ஆயினும் இவர்கள் பெரிதும் உழவையே நம்பினர். இரும்பினல் ஆன அம்பு நுனிகள் புதை குழிகளில் இருந்து கிடைத்தன. இவை யனைத்தும் வேட்டை-உழவுக்கலப்பு நாகரிகம் எனக் காட்டும், 1