பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராச்சியத்திலும் இதற்கப்பாற்பட்ட அறுநூறு யோசனத் துரத்திலுள்ள அன்டியோக்கஸ், என்னும் யவன அரச னுடைய தேசத்திலும், அதற்கும் அப்பால், டாலமி. ஆன்டிகோனஸ், மகஸ், அலெக்ஸாந்தர் என்னும் பெயருள்ள நான்கு அரசர்களின் தேசங்களிலும், இப்பால் தெற்கே யுள்ள சோழ, பாண்டிய, தாம் பிரபன்னி (இலங்கை) வரை யிலும் இந்த வெற்றி அரசரால் கைப்பற்றப்பட்டது”.* மேலும் 'சோழ, பாண்டிய, சத்திய-புத்திர கேரளபுத்திர தேசங்களிலும்’ அரசன் மக்களுக்கும், விலங்குகளுக்கும் மருத்துவ சிகிச்சைக்கு, ஆதுவர் சாலைகளே அமைத்த செய்தியை அசோகனது மற்ருேர் சாசனம் கூறுகிறது. என்பதை எடுத்துக்காட்டி இச்சாசன காலமான கி. மு. 358க்கு முன்னரே பெளத்த பிக்குகள் தமிழ்நாட்டில் அறத்தொண்டிலும் மருத்துவத் தோண்டிலும் ஈடுபட்டிருந் தார்கள் எனக் கூறுகிருர்கள். வேறு பல சான்றுகளையும் நிரல்படக் காட்டி கீழ்வரும் முடிவுக்கு அவர்கள் வருகிரு.ர்கள். 'தமிழ்நாட்டில் பெளத்தம் எக்காலத்தில் வந்தது ? இம்மதத்தைக் கொண்டுவந்து இங்கு புகுத்தியவர் யார் ? என்னும் விளுக்களுக்கு, கி. மு. மூன்ரும் நூற்ருண்டில் இந்த மதம் தமிழ் நாட்டிற்கு வந்ததென்றும், இதனை இங்குக் கொண்டு வந்து புகுத்தியவர்கள் அசோக மன்னரும் அவரது உறவினரான மகேந்திரரும் மற்றும் அவரைச் சார்ந்த பிக்குகளும் ஆவர் என்று வி ை. கண்டோம்.” ே இம்முடிவு எனக்கும் உடன்பாடே. அவ்வாருயின் தமிழ்நாட்டில் முதன் முதலில் புகுந்த பெளத்தம் அசோகன் ஆதரித்த தேரவாதமே. அக்காலத்தில் தேரவாதத்தை எதிர்க்கும் மஹrசங்கிகம் என்ற பிரிவு இருந்தபோதிலும், அசோகன் ஆதரித்த பிரிவினரே அவனது ஆதரவோடு தமிழ் நாட்டில் பரவினர். பிற்காலத்தில் பலவகைப் பிரிவினரும் பரவியிருந்தனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. ፰ 88