பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொள்கைகள் பரவுவதற்கு முன்னே மணிமேகலை இயற்றப் பட்டதாதல் வேண்டும்”. - . அதே நூலில் ம. சீ. வே. அவர்கள் மணிமேகலையின் காலத்தை நிறுவப் பல ஆதாரங்கள் கூறியுள்ளார்கள். அவற்றுள் மேற்கூறிய கருத்து மட்டும் நமது ஆராய்ச்சிப் பொருளோடு நேரடித் தொடர்புடையது. எனவேதான் பிற சான்துகளை நீக்கி இதனை மட்டும் குறிப்பிட்டேன். எனவே வேங்கடசாமி அவர்கள் மணிமேகலையின் பெளத்தம் சளுயனம் அல்லது தேரவாதம் என்றே கூறுகிரு.ர்கள். இனி வையாபுரிப் பிள்ளையவர்கள் கருத்தை அறிந்து கொள்ளுவோம். அவர்கள் காவியகாலம் என்ற நூலில் மணிமேகலையின் காலத்தை ஆராயும் பொழுது அந்நூலில் மஹாயனக் கொள்கைகளான எண்ணில் புத்தர்கள்’ என்ற கருத்தும், தின்னகர், தர்மபாலர் முதலிய அளவை நூலாசிரியர்களது கருத்துக்களும் அறவணர் அறவுரையில் காணப்படுவதால் அது பிற்கால நூலென்றும், இது மஹாயனக் கொள்கைகளோடு உடன்படுகிறது என்றும் கூறுகிரு.ர்கள். . . . . . . . உ. வே. சாமிநாதய்யர் அவர்கள் 19 மணிமேகலையின் காலத்தை இரண்டாம் நூற்ருண்டு என்று முடிவு செய்து அப்பொழுது மஹாயனம் தோன்றவில்லை என்றும், எனவே மணிமேகலையில் காணப்படும் பெளத்த சமயக் கருத்துக்கள். தேரவாதக் கருத்துக்களே என்றும் கூறுகிரு.ர்கள். மேற்காட்டப்பட்டுள்ள ஆராய்ச்சியாளர்களது முடிவு களோடு உடன்படுவது அல்லது மாறுபடுவதற்கு முன்னல், இப்பிரிவுகள் ஏற்பட்ட வரலாறு பற்றி இவ்விரு பிரிவினரும் கூறுவது என்னவென்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். அதன் பின்னர் இவ்விரண்டு பிரிவினரின் அடிப்படையான தத்துவ வேறுபாடுகளைத் தெரிந்துகொள்ள் வேண்டும். பிறகு சமய நடைமுறை வழக்கங்கள் எவ்வாறு இரு 140