பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரிவினரிடையேயும் வேறுபட்டிருந்தன, அன்றி ஒன்றுபட் டிருந்தன என்று காணவேண்டும். தமிழகத்தில் இரு பிரிவினரும் இருந்தனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளமை யால் இவ்விருவரும் கொள்கைகளிலும், பழக்க வழக்கங் களிலும் மாறுபட்டும், இணைந்தும் தின்றது எவ்வாறு என்பதையும் நோக்கவேண்டும். இவ்வாறு காண்பதில் இரண்டு சமயங்களேயும் அவற்றின் வரலாற்று வளர்ச்சிப் போக்கில் அறிந்து, தமிழ்நாட்டிற்கு வந்தபின் அவை மாறிய போக்குகளையும் அறிதல் வேண்டும். இத்துணை பெரிய ஆராய்ச்சியை நிகழ்த்த, ஒருவருக்குப் பெளத்த நூல்களில் சிறந்த புலமை இருத்தல் வேண்டும். மணிமேகலையின் காலத்துக்கு முன்னர் தோன்றிய தேரவாத, மஹாயன நூல்களேயும், அவற்றின் உரைகளையும் அறிந்திருக்க வேண்டும். அந்நூல்களைக் கற்க வடமொழி, பாலி, சிங்கள, திபெத்திய, சீன, சயாமீய, பர்மீய மொழிகள் தெரிந்திருக்கவேண்டும். சில ஆதிபாலி நூல்கள் வழக் கொழிந்து பிற்கால மொழி பெயர்ப்புகளாக மேற்குறித்த கிழக்காசிய நாட்டு மொழிகளில் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலான நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப் படவில்லை. எனவே ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப் பட்டுள்ள சில நூல்களையும், நூல் சுருக்கங்களையும் கற்றறிந்தே நான் இவ்வாராய்ச்சிக் கட்டுரையை எழுத முடியும். - பெளத்த தத்துவம், சமயம், ஒழுக்கம், வரலாறு போன்ற துறைகளிலுள்ள பண்டைய நூல்களின் பரப்பு எவ்வளவு விரிவானது என்பதைக் காட்ட எட்வர்டு கான்ஸ் என்ற பெளத்த தத்துவ ஆராய்ச்சியாளர் கூறுவதைச் சுட்டிக் காட்டுவேன். . பண்டைய பெளத்த நூல்கள் ஏராளமானவை. லட்சக் கணக்கான பக்கங்களுக்கு அவை நீளும். பாலி மொழி நூல்கள் ஒரே ஒரு பிரிவினருடையவை. அவை மட்டும் சயாமிய மொழியில் 45 பெரிய புத்தகங் 44 &