பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படும் வரலாற்று புத்தர் பரிநிர்வாணம் அடைந்து நூருண்டுகள் கழிந்திருந்தன. (8) அச்சமயம் வைசாலியில் வஜ்ஜிப் பிரிவைச் சேர்ந்த பிக்குகள் பத்து அம்சங்கள் 18 நியாயமானவை என்று வெட்க மின்றிப் பிரசாரம் செய்தனர். {9} அதாவது கொலம்பில் உப்பு இரண்டு விரல் அகலம்’, ‘கிராம விஜயம்', 'வாசம்’, ‘சம்மதம்', கடையாத பால் "புளிக்காத கள்.” - (10) 'நூல் இல்லாத ஆசனம்', 'தங்கம் ஆகியவை.” இனி நடந்தது என்ன வென்பதை மகாவம்சம் எவ்வாறு கூறுகிறதென்பதைச் சுருக்கமாகப் பார்ப்போம். யாச தேரர் இப்பிரச்சினேக்கு முடிவு காண இந்தியா முழுவதிலுமுள்ள தேரர்களுக்கு அறிவித்து பிக்குகளின் மகாசங்கமொன்றை அகோகங்கமலையில் கூட்டிஞர். அவர்களனைவரும் தம்முள் முதன்மையான ரேவத தேரரிடம் சென்றனர். அவர்களக்ன வரும் ரேவத தேரரோடு வைசாலிக்குச் சென்றனர். அங்கு யாச தேரர், இப்பத்து ஒழுக்க முறைகள் சமயக் கோட்பாடு களுக்கு உடன்பட்டவையா என்று அவரை வினவினர். அவர் அவை தவருனவை எனக்கூறி அதனைப் பிக்குசங்கம் முடிவு செய்தல் வேண்டும் என்று தெரிவித்தார். தவருன வழியைப் புகுத்திய வஜ்ஜிய பிக்குகள் இதை யறிந்து ரேவத தேரரைத் தங்கள் பக்கத்தில் சேர்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டனர். அவருக்குக் காணிக்கை யாகத் துறவிகளுக்குத் தேவையான பல பொருள்களைச் சேகரித்துக் கொண்டு வைசாலிக்குப் புறப்பட்டு வந்தனர். வரும் வழியில் புருஷபுரம் சென்று காலசோக மன்னனைச் 4 சந்தித்து, தங்கள் விகாரையைக் கைப்பற்றிக் கொள்ள ஆயிரக்கணக்கான பிக்குகள் திரண்டு வருவதாகவும், தங்கள் விகாரையைப் பாதுகாத்துக் கொடுக்குப்படியாகவும் வேண் டினர். அரசன் அதனை நம்பி அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கச் சம்மதித்தான். ஆனல் அன்றிரவு துறவியான 德憲