பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேரிநந்தா என்னும் அவனுடைய சகோதரி அரசனது கனவில் தோன்றி ரேவத தேரரின் தலைமையில் இருக்கும் பிக்குகளே உண்மையான வழியைப் ೨.೬Ap೬೩ ಹಣ என்றும், அவர்களை அரசன் ஆதரிக்க வேண்டுமென்றும் சொன்னுள். அரசன் மறு நாள் காலையில் ரேவத தேர ரிடம் சென்று அவர்களுடைய கொள்கைக்கும் சங்கத்திற்கும் தான பாதுகாவலனுக இருக்கப் போவதாக வாக்களித்து விட்டு தலைநகருக்குத் திரும்பிஞன். இதற்குப் பிறகு இப்பத்து அம்சங்கள் குறித்து முடிவு செய்யப் பிக்குகள் சபை கூடியது. உபாறிக முறையில் : இவற்றை முடிவு செய்ய எட்டு பிக்குகளை அவர் தேர்ந்தெடுத் தார். அவர்களனைவரும் திரிபிடகத்தைக் கற்றுத் தேர்ந்து தசசீலத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர்கள். அவர்கள் சப்தகாமி தேரரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள். அவர் பத்து அம்சங்கள் பற்றியும் உபாஹிக உறுப்பினர்களைக் கேள்விகள் கேட்டார்; முடிவில் இப்பத்து அம்சங்களும் பெளத்த சங்க மரபுக்கும். பிக்குகளின் ஒழுக்க விதிகளுக்கும் புறம்பானவை” என்று தீர்ப்பளித்தார். இதன் பிறகு பிக்குகள் மகாசபை கூட்டி இத்தீர்ப்பை உறுதி செய்தனர். இவ்வாறு பத்து ஒழுக்க விதிகளைப் பின் பற்றிய பிக்குகளின் போதனைகளே இம் மகாசபை மறுத்தது. இதன் பின்னர் ரேவத தேரர் பிக்குகளின் மகாசபையி விருந்து 760 பிக்குகளைத் தேர்ந்தெடுத்தார். இவர்கள் கால கோகனது பாதுகாப்பில் ரேவத தேரர் தலைமையில் கூடி தர்மக் கோட்பாடுகளைத் தொகுத்தனர். ஏற்கெனவே நிர்ண யிக்கப்பட்டுப் பின்னர் பரப்பப்பட்ட தர்மக் கோட்பாடுகளை இவர்கள் ஏற்றுக் கொண்டவர்கள் ஆகையால் இவர்கள் எட்டு மாதங்களில் அனைத்து நூல்களையும் தொகுத்து விட்டார்கள். ஆரம்ப காலத்தில் புத்தரின் தேரரும் மற்றவர்களும் கூடித் தொகுத்த தர்மக் கோட்பாடுகள் தேரவாதம் எனப் பட்டது. இத்தேரவாத மரபு முதல் நூறு வருடத்தில் 莓