பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்ருகவும், ஒன்றுபட்டதாகவும் இருந்தது. ஆளுல் அதன் பின்னர் பிற தர்மக் கோட்பாடுகள் எழுந்தன. இரண்டாவது மகாசபையை நடத்திய தேரர்களால் அடக்கப்பட்ட தவருன வழிகளில் சென்ற பத்தாயிரம் பிக்கு களும் மஹாசம்ஹிகை என்ற ஒரு பிரிவை நிறுவினர். இதிலிருந்து பல பிரிவுகள் பின்னர் தோன்றின. அவை பின்வரும் அட்டவணையில் காணப்படும். இவ்வாறு புத்தர் மறைவிற்குப்பின் 200 ஆண்டுகளில் மொத்தம் பதினெட்டுப் பிரிவுகள் தோன்றிவிட்டன. இவர்களிடமிருந்து இன்னும் ஆறு பிரிவுகள் தோன்றின. இவ்விவரம் இலங்கையில் 4 முதல் 6ம் நூற்ருண்டு வரையில் எழுதப்பட்ட மகாவம்சத்திலிருந்து கிடைக்கிறது. எழுதப்படுவதற்கு முன்பே ஆசாரிய பரம்பரை என்று செவி வழிக் கதைகள் வழங்கியிருந்தன. அவற்றை ஆதாரமாகக் கொண்டே தேரிகதை, தேரகதை என்ற ஆசார்ய வரலாற்று நூல்கள் பிற்காலத்தில் தோன்றின. எனவே இக்கதையில் காணப்படும் இயற்கைக்கு அதீதமான நிகழ்ச்சிகளை விட்டு விட்டுப் பார்த்தால் தேரவாத நோக்கில் சங்கம் இரண்டாகப் பிரிந்த நிகழ்ச்சியை இவை விரிவாகவே கூறுகின்றன. அசோகனுடைய காலத்துக்கு முன்னலேயே காலசோகன் காலத்தில் சங்கத்தில் முதல் கருத்து வேற்றுமை ஏற்பட்டது. அது பெளத்த பிக்குகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத் தியது என்பதை மேற்கூறிய குறிக்கோள் பகுதி தெளிவாகக் கூறுகிறது. * - - எதற்காகக் கருத்து வேற்றுமை ஏற்பட்டது என்பதை மேற்கோள் பகுதி தெளிவாக்கவில்லை. மேற்பார்வைக்கு புத்த பிக்குகளின் நடைமுறை வாழ்க்சையில் பத்து விதமான கட்டுப்பாடுகள் இருத்தல் வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றி விவாதம் எழுந்ததாகத் தோன்றுகிறது. இரு கட்சி யினரும் பிக்குகளைத் தம் பக்கம் திரட்டுவதிலும் அரசன் ஆதரவைப் பெறுவதிலும் முனைந்து நின்றனர் என்பது 145