பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளக்கமாகத் தெரிகிறது. பிக்கு வாழ்க்கையின் கட்டுப்பாடு பற்றி அரசனுக்கும் மக்களுக்கும் அவ்வளவு ஆர்வம் ஏற்பட்டு விடமுடியாது. ஆகவே அடிப்படையில் ஏதாவது வேறுபாடு இருந்திருத்தல் வேண்டும். இதனே 68வது கலோகம் குறிப் பிடுகிறது. தர்ம போதனையிலேயே அவர்களிடையே வேறு பாடு தோன்றிவிட்டது. அதாவது தத்துவக் கருத்துக்களில் மாறுபாடு காணப்பட்டது. தேரவாதிகள் தங்கள் சங்கத்தைப் பற்றியே கவலைப்பட்டனரென்றும், பிற்கால மஹா சங்கிகர்கள் அரசளுேடும் மக்களோடும் நெருங்கிய உறவு கொண்டு வாழ முனேந்தனரென்றும், அதஞலேயே மக்களிடம் பல பொருள்களே வாங்கிக் கொண்டு அவர் களோடு பழகலாம் என்ற விதிகளே அவர்கள் தங்கள் சங்கங் களில் கடைப்பிடித்தார்களென்றும் தெரிகிறது. இதனை எதிர்த்துத்தான் தேரவாதிகள் அவர்களேச் சங்கத்திலிருந்து விலக்கினர். ஆயினும் அவர்கள் பணிந்து போகவில்லை. தனியான சங்கம் அமைத்து மஹாசங்கிகர்கள் என்று தங்களுக்குப் பெயர் வைத்துக் கொண்டார்கள். இப்பிரிவி லிருந்துதான் பிற்காலத்தில் மஹாயன பெளத்தப் பிரிவுகள் தோன்றின. இதனைக் குறித்து தேவிப்பிரசாத் சட்டோபாத்யாயா தமது ஆன்மீக வாதம்-ஒர் அறிமுகம் என்ற கட்டுரையில் விளக்கம் கூறுகிருர்கள். மஹாயன பெளத்தம் தேரவாதத் தினின்றும் அடிப்படைத் தத்துவத்தில் வேறுபட்டது. ஆயினும் புத்தருடைய போதனைகளிலிருந்துதான் இத் தத்துவம் தோன்றியது என்பதைக் காட்ட மஹாயன பெளத்தத்தை நிறுவிய நாகார்ச்சுனர் கையாண்ட முறைகளை தேவிப் பிரசாத் சுட்டிக் காட்டுகிருங்கள். அவரது விளக்கத்தை இங்குக் காண்போம். 'ஆன்மீக தத்துவவாதிகள் என்ற முறையில் பெளத்தர் களும் கடைசியில் தமது சொந்தக் கொள்கைக்கு ஒரு விதமான தெய்வீக அங்கீகாரத்தையோ அல்லது முன்னுேர் நூல் முடியையோ சான்று காட்ட வேண்டியதாயிற்று. அவர்களைப் (மஹாயனிகள்) பொறுத்தமட்டில் இது ஒரு

  1. 4 of