பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனித் தன்மையான கடினமான பிரச்சினையாக இருந்தது. ஏனெனில் அவர்களின் சமய ஸ்தாபகர் வரலாற்றுக் காலத் தில் வாழ்ந்த மனிதர். தன் பக்கத்திலிருப்பவன் துன்பத்தைப் பார்க்கப் பொருதவர். அதனல் மனம் நெகிழ்ந்து. மனத் திற்கு ஒரு சாந்தியை ஏற்படுத்த உபதேசித்த மனிதர். எனவே அவர் உபயோகமற்ற அப்பாலைத் தத்துவம் எதையும் உபதேசிக்காத அல்லது ஊக்குவிக்காத யதார்த்தவாதியாக இருந்தார். ஆண்டவனிடம் அவர் நம்பிக்கை வைக்கவில்லை. அவருக்குச் செலுத்துகிற பிரார்த்தனைகளும், வேள்விகளும் மனிதகுல துன்ப துயரங்களுக்கு ஒரு மாற்ருக ஆக முடியா தென்று அவர் உபதேசித்தார். புத்தர் வற்புறுத்திச் சொன்ன தெல்லாம் சரியான முறையில் பிறப்பிறப்பைப் பற்றிப் புரிந்து கொள்வதைப் பற்றியும் அதிலிருந்து விடுதலை பெறு வதைப் பற்றியும்தான். அந்த வழி குறிப்பிட்ட ஒரு ஒழுக்க நெறியைப் பின்பற்றுவதன் மூலம் சாத்தியம் ஆகும். மேலும் மஹாயன பெளத்தர்களின் கொள்கைக்கு நேர் விரோத மான முறையில் சந்தேகத்துக்கிடமில்லாதபடி புத்தர் அப்பாலைத் தத்துவங்களே வெறுத்துப் பேசியிருந்தது அவர் களுக்கு மிகவும் விரோதமாக இருந்தது. இந்த நிலை வரலாற்றின் நினைவிலிருந்து புத்தர் ஒரு வரலாற்று மனிதர் என்ற உண்மை மறைந்து போகும் வரை நீடித்தது. ” இத்தகைய சூழ்நிலைகளில், மஹாயனர்கள் தமது ஆன்மீக அப்பாலைத்தத்துவத்திற்கு தெய்வீக அங்கீகாரத்தை -அதுவும் புத்தரின் கொள்கை ரீதியான அங்கீ கார்த்தைப் பெறுவது எப்படிச் சாத்தியமாகும்? '

  • மஹாயனக் கொள்கையின் உண்மையான தோற்றத் தைப் பற்றி இன்னும் ஆராய வேண்டியது இன்று கூட முக்கியமான விஷயமாகவே இருக்கிறது. ஆனல் பெளத்தர்களின் மரபுப்படி சொல்லப்படுகின்ற ஒன்றை நாம் முழுமையாக மறுத்துவிட முடியாது. புத்தரின் மறைவுக்குப் பின்னுல் துருண்டுகள் கழித்துப் பழைய மதத்திவிருந்து வெளியேறிய பிக்குகள. கிய மஹா சங்கிர்கள் எனப்படுவோர்தாம் மஹாயனத்தின் முன்னேடிகள்.

惠德怒