பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர்களது மத நூல்களின்படி பார்த்தால் லோகோத்தார புத்தர் என்று அவர்கள் ஏற்படுத்திக் கொண்ட கொள்கையே பிரிவு ஏற்பட்ட இடம் எனலாம். புத்தரை ஒரு வரலாற்று மனிதராக ஒப்புக்கொள்ள அவர்கள் தயாராக இல்லை, மாருக அவர் அமானுஷிய சக்தி உடையவர் என்றும் வழி பாட்டுக்குரியவர் என்றும் எண்ணப்பட்டார். மஹா யனர்கள் இந்த உணர்வை மேலும் விரிவாக்கிப் புத்தரைத் தெய்வமென்றே ஆக்கும் அளவிற்குக் கொண்டு சென்று விட்டார்கள். புத்தரின் சரித்திர பூர்வமான தன்மையை ஒதுக்கித் தள்ளும் அளவிற்கு மாயங்களும், மூட நம்பிக்கை களும் மலிந்த புதிய வாழ்க்கை வரலாறுகள் அதற்குத் தகுந்த முறையில் எழுதப்பட வேண்டியதாயிற்று. மஹா விஸ்து என்ற நூலிலும், லலித விஸ்த்ாரம் என்ற நூலிலும் இவ்வாறு செய்யப்பட்டிருக்கிறது. முதல் நூல் மஹா சங்கிகர்களுடையது. இரண்டாவது அவர்களது கொள் கைக்கு ஒப்பு பஹாயனர்கள் எழுதியது............................ ...புத்தரின் மூலக்கொள்கையோடு மஹாயனம் தொடர் யுடையது என்று உரிமை கொண்டாட இரண்டு விஷயங்கள் தேவைப்பட்டன. நம்ப முடியாத புராணக் கதைகளை உருவாக்க வேண்டும். சாஸ்திரிய நூல்களைப் போலியாகத் தயாரித்தாகவேண்டும். மஹாயனர்கள் இரண்டையுமே செய்தார்கள். 'மஹாயனம் என்பது புத்தரின் கொள் கையைத் தவிர வேருென்றும் இல்லை. அது முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் மறைபொருள் கொண்டதாகவும் இருந்த தால்தான் புத்தரால் வெளிப்படுத்தப்படாமல் இருந்தது. இக்காரணத்தால் தான் பாலிமொழித் தத்துவ சாஸ்திரங் களில் அது இடம் பெறவில்லை. ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது பிரபலமடையாமல் இருந்ததற்கு அதுவே காரணம்” என்று அவர்கள் கூறிஞர்கள். தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு சிலருக்கு மட்டுமே புத்தர் இந்த மேலான உண்மையைப் போதித்தார். இந்த உண்மை அவரது நிர்வானத்திற்குப் பிறகு 500 ஆண்டுகள் கழித்து வெளி த.த- 18 149