பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யிடப்படவேண்டும். அதாவது அந்தச் சமயத்தார் எல்லோரும் தாழ்ந்த உண்மையைக் கடைப்பிடித்து ஒழுகிய பின்னரே இந்த மேலான உண்மை பிரசாரம் செய்யப்பட வேண்டும்' என்ற ஒரு வதந்தியையும் அவர்கள் பரப்பினர்கள். இந்த ஐநூறு ஆண்டுகள் என்ற கணக்கே வேண்டு மென்று சொல்லப் பட்டதாகும். ஏனெனில் கிட்டத்தட்ட இந்தக் கால கட்டத்திலேதான்-மர்மமாக இருக்கிற தென்ருலும்-மஹாயனக் கொள்கையை ஆதரித்துப் பல நூல்கள் வெளிவந்தன. கலப்பான சமஸ்கிருதத்தில் எழுதப் பட்ட இவை மஹாயன சூத்திரங்கள் என்று அழைக்கப் பட்டன. இவற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவை, பிரக் ஞாபராயிதை, சமாதிராஜ்யம், லங்காவதாரம், லத்தர்ம புண்டரீகம் போன்றவையாகும். "இவைகளின் அடிப்படை நோக்கம் புத்தரின் வழி பாட்டை ஏற்படுத்துவதும், அவரைக் கருணையும் போதியும் (ஞானம்) கொண்ட கடவுளாக ஆக்குவதுமேயாகும். இப்படித்தான் புத்தரின் கொள்கையான கடவுள் மறுப்புக் கொள்கை முதுகில் குத்துண்டது. மஹாயனம் எல்லாவிதமான மூடநம்பிக்கைகளுக்கும் இருப்பிடமாகத் திகழ ஆரம்பித்தது. 'இந்தப் பிற்காலத்திய நூல்களுக்கு அத்தகைய உயர்ந்த சாஸ்திரிக சம்மதத்தைத் தந்ததால் உண்டான தர்ம சங்கட மான உணர்ச்சியைச் சமனப்படுத்த மஹாக:ன பெளத்தர்கள் இந்நூல்கள் திடுதிப்பென்று வந்து விடவில்லை என்று நம்ப ஆரம்பித்தார்கள். - நாகார்ச்சுனர் மஹா சங்கிகையின் ஒரு பிரிவான சர்வாஸ்திவாதியாக இரு ந் த போது நாகர் இன மக்களிடையே பிரக்ஞாபராமிதை என்னும் நூலைக் கண்டு பிடித்தார் என்று ஒரு கதையை உருவாக்கிப் பரப்பினர்கள். 蔓荔获