பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மையில் நாகார்ச்சுனரே இந்நூலின் ஆசிரியர். "நாகார்ச்சுனர் எந்தக் கொள்கைக்காக தமக்கே உரிய முறையில் போராடி வந்தாரோ, அதே கொள்கை பிரக் ஞாபராமிதையில் மந்திரச் சொற்களில் அழகாகப் பொதியப் பட்டு புத்தரின் அங்கீகாரத்தோடு கொள்கை ரீதியாக வழங்கப்பட்டிருக்கிறது.” 'மஹாயன சூத்திரத்தில் பலவிதமான சமயக் கருத்துக் களுக்கிடையே முன் நிலை அப்பாலைத்தத்துவம் (? o t ) metaphysics) ஊடுருவி நிற்கிறது. இது பெரும்பாலும் உப நிஷதத்தில் காணப்படும் உலக வா ழ் வி ன் ஸ்துலமான உண்மையான இயல்பைக் குறைத்துக் காட்டக்கூடிய தன்மையை எதிரொலிக்கும் விதமாக இருக்கிறது. ஸ்ம் விருத்தி சத்யம்' என்று வழங்கப்படும் அனுபவரீதியான யதார்த்த உண்மையானது நமது உலக வாழ்வைப் பொறுத்த மட்டிலுமே உண்மை. முழுமையான சிரேஷ்டமான உண்மை யல்ல; பரமார்த்திக சத்யமல்ல. உலகைப் பொய்யென்று கூறும் மஹாயனக் கொள்கையிலிருந்து மாத்யமிகம், யோகாச்சாரம் என்ற இரண்டு கொள்கைகள் தோன்றின.” மேற்கூறியவற்றிலிருந்து .ெ ப ள த் த த் தி ன் முக்கிய பிரிவுகள் தோன்றிய வரலாறு தெளிவாகிறது. இவற்றின் தத்துவக் கொள்கைகளும், சமய நம்பிக்கைகளும் எவ்வாறு வேறுபடுகின்றன என்று அறிந்து கொண்டால்தான் மணிமேகலையில் விளக்கப்படும் பெளத்தக் கொள்கைகளின் சார்புத் தன்மையை நாம் இனங்காணமுடியும். எனவே, தேரவாதம், மஹா சங்கிகம், மஹாயனம் இவற்றின் தத்துவ, சமயக் கோட்பாடுகளின் வேறு பாடுகளைச் சுருக்க மாகக் காண்போம். - - புத்தரது போதனைகள் மிகப் பழமையான வடிவத்தில் பாலி மொழியில் எழுதப்பட்ட சமய நூல்களில் காணப்படு கின்றன. இவை தேரவாதிகளுக்குப் பிரமாணமானவை. இவற்றின்படி புத்தர் மனித இயல்புடையவர். மனிதனது I 5 I