பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறைபாடுகள்கூட அவரிடம் இருந்தன. மனிதரினும் மேம் பட்ட உயர்ந்த பண்புகளும் அவரிடம் இருந்தன: இவர்களது கொள்கைப்படி புத்தரது கொள்கைகள் எளிமையானவை. தீயனவற்றை விலக்கி நல்லனவற்றைக் கடைப்பிடித்து மனத்தைத் தூய்மையானதாகச் செய்து கொள்ள வேண்டுத் இதனைச் செயல்படுத்த சீலம், சமாதி, பிரக்ஞை என்ற முறை கன்ப் பின்பற்றுதல் வேண்டும். இல்லறத்தாருக்குப் பஞ்ச சீலமும், இல்லறத்தாரில் சிறந்தவர்களுக்கு அஷ்ட சீலமும் விதிக்கப்பட்டன. துறவிகள் தசசீலத்தை அனுஷ்டிக்க வேண்டும், இச்செயல்கள் மூலம் மனத்தின் உள்காட்சியை கூர்மையாக்குதல் பிரக்ஞையாகும். பிரக்ஞை வளரும் பொழுது நான்கு உயர்ந்த உண்மைகள் புலப்படும். அவை : : 1. நோய் (துக்கம், 2. நோய்க் காரணம் (துக்கோற்பத்தி) 3. நீங்கும் வாய் (துக்க நிவாரணம்} 4. நோய் நீங்கும் வழி (துக்க நிவாரண மார்க்கம்). புலன்களால் உண்டாகும் பற்றுக்கள் துன்பம் தருவன. இதையறிவது முதல் உண்மை. துன்பம் விளைவதற்குக் காரணமாக இருப்பனவற்றை உணர்வது இரண்டாவது உண்மை. துன்பத்தையும், அதற்கு எது காரணமென்பதை பும் அறிந்து அதனின்றும் விடுதலையடைவதற்குரிய வழியை அறிவது மூன்ருவது உண்மை. துன்பத்தைப்போக்கி துன்ப மற்ற நிர்வாண நிலையை அடைவதற்குரிய வழியைப் பின் பற்றி ஒழுகுவது நோய் நீக்கும் வழியாகும். இது எட்டு உறுப்புகளைக் கொண்டது. . நற்சாட்சி 2. நல்லுரற்றம் அல்லது நற்கருத்து 3. நல்வாய்மை 4. நற்செப்கை 5. நல் வாழ்க்கை 6. நல்லூக்கம் (நன்முயற்சி) 7. நற்கடைப்பிடி 8. நல்லமைதி (சமாதிர். இவற்றுள் மேற்கூறிய சீலம், பிரக்ஞை, சமாதி மூன்றும் அடங்கும். இதுவே வாழ்க்கை முறை பற்றிய தேரவாதிகளின் கருத்து. இனி, அவர்களது தத்துவமும் எவ்விதச் சிக்கலுமில்லாது எளிமையாகவே இருக்கிறது. உலக நிகழ்ச்சிகளனைத் தும் 15.3