பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யும் விரும்பவில்லை என்று தேவிபிரசாத் சொல்லியதை முன்னர் காட்டிய மேற்கோளில் கண்டோம், வையாபுரிப் பிள்ளையவர்களும் இதற்கோர் உதாரணம் காட்டி இதே கூற்றை விளக்குகிருர்கள். மாலுங்கியர் என்பவரது புதல்வர்கள் புத்தரிடம் பிறப்பு, இறப்பு, இறப்பின் பின் மனிதன் நிலை, ஆன்மா முதலிய பொருள்களைப் பற்றிப் பல கேள்விகள் கேட்டனர். இதற்கு விடையாகப் புத்தர் கூறியது வருமாறு: "ஒருவன் விஷமூட்டிய அம்பினுல் எய்யப்பட்டு வருந்திக் கொண்டிருக்கிருன். அவனுடைய நண்பர் ஒருவர் ஒரு வைத்தியரிடம் விரைந்து சென்று அவரை அழைத்து வருகிருர், வைத்தியர் அம்பை வெளியே உருவி எடுக்கப் போகும் சமயத்தில் காயமுற்றவன், நிறுத்துங்கள் நான் கேட்கிற கேள்விகளுக்கெல்லாம் விடை சொன்னதற்கு அப்புறம் தான் அம்பை நீங்கள் எடுத்து விடலாம். யார் இந்த அம்பை எய்தது? rத்திரியணு, பிராம்மணன, வைசியணு, சூத்திரளு? அவன் எந்தத் குலத்தைச் சார்ந்தவன்? அவன் நெடியவன அல்லது குறுகியவன? அம்பு எவ்வகையைச் சார்ந்தது? அதன் இயல்பு என்ன, என்று பல கேள்விகள் கேட்கிருன். அப்பொழுது என்ன, நேரிடும் என்று கேட்க வேண்டுமா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்லி முடிக்குமுன் அவன் இறந்து விடுவான். இதைப் போலவேதான் உலகத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்களைக் குறித்து கேள்விகள் கேட்கும் மாளுக்கனும் துக்கம், துக்கோற்பத்தி, துக்க நிவாரணம்,துக்கநிவாரண மார்க்கம் என்பனவற்றின் உண்மைகளைத் தெரிந்து கொள்வதற்கு முன் இறந்து விடுவான் என்பது நிச்சயம்’. இனி, மஹா சங்கிகர்கள் எனப்படும் பிரிவினரின் தத்துவத்தையும், சமயக் கோட்பாடுகளையும் சுருக்கமாகக் கவனிப்போம். இவர்கள் தான் முதன் முதலில் பிரிவற்ற பெளத்த சங்கத்திலிருந்து விலகியவர்கள். இவர்களது 罩群会