பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும், கோட்பாடுகளும் பிற்கால மஹாயனம் தோன்றுவதற்கு இடைப்பட்ட கருத்துக்களாக இருந்தன. இவர்கள் பிரிந்து சென்ற வரலாற்றை மஹாவம்சம் கூறும் விதத்தில் நாம் முன்னரே கண்டோம். இவர்கள் தேரவாதி களோடு சில அடிப்படைக் கருத்துக்களில் உடன் படுகிருர்கள். நான்கு உண்மைகள், அஷ்டாங்கப்பாதை, அனத்மா, கருமம் அல்லது காரண காரியத் தொடர்ச்சி, 38 விதமான உலக மூலங்கள், படிப்படியான வளர்ச்சியால் முழு நிறைவான திருவாண மெய்துதல் போன்ற கொள்கைகள் இவர்களுக்கு உடன்பாடே. ஆனல் இவர்கள் எங்கு தேரவாதத்தினின்றும் வேறுபடுகிருர்கள்? இவர்கள் புத் தர்கள் லோகோத் தாரத் தன்மையுடையவர் களென நம்பினர்கள். அதாவது அசுத்தத் தன்மை எதுவும் அவர்களிடம் இல்லை. அவர்களுடைய உடலும், ஆற்றலும் எல்லையற்றவை. அவர்களுக்குத் தீர்க்க ஆயுள் உண்டு. அவர்கள் உறங்குவதோ கனவு காண்பதோ இல்லை. அவசங் களை வென்றதால் மணம் நிலத்த அமைதியில் இருக்கும். ஒரு கணத்தில் அனைத்தையும் அறியும் ஆற்றல் அவர்களுக்கு இருக்கும். புத்தர்கள் மனிதத் தன்மைகளுக்கு அப்பாற் பட்டவர்கள். புத்தர்கள் எண்ணற்றவர்கள், அவர்கள் சாதாரண மனிதர்களைப் போலப் பிறப்பதில்லை. கருவில் வளர்ச்சியுறும் அவஸ்தை அவர்களுக்கு இல்லை. ஆசை, கோபம், குரோதம் மு. த லி ய உணர்ச்சிகள் அவர்களிடம் தோன்றமாட்டா. புத்தராகப் போகும் அவதார புருஷர்கள் போதி சத்துவர்கள் எனப்படுவர். இது தான் முக்கியமான வேறுபாடு புத்தரைத் தெய்வ மாக்கி, அவருடைய போதனைகளைப் புனிதமானவை என்று நம்பச்செய்து, பெளத்தத்தை ஒரு வெகுஜன மதமாக்கும் அம்சங்கள் இவை. இதைத் தவிர மஹாசங்கிகர்கள் தேரவாதத்தினின்றும் சில தத்துவ அம்சங்களிலும் வேறுபட்டனர், - 155