பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ற பல பெயர்களாலும் வழங்கப்படும் தாய்த்தெய்வம் ஆவாள். தாய்த்தெய்வ வணக்கம், வேட்டைச் சமுதாயத்தி லிருந்து, புராதனகால உழவுத் தொழில் தோன்றிய காலத் தில் தோன்றியிருக்கிறதென்று மானிடவியலார் கூறுவர். சைபீல் என்ற கிரேக்க தெய்வம் வேட்டைத் தெய்வமான டையாளுவிடமிருந்து பிரிந்து உழவுத் தொழிலின் செழிப்புப் பண்பைப் பெற்றுப் புதிய தெய்வமாகிறது. உலகமெங்கும் தாய்த்தெய்வம் முதல் சட்டத்தில் பருத்த மார்பகங்களை உடையதாகவும், இரண்டாவது கட்டத்தில் பருத்த அடி வயிற்றை உடையதாகவும் சிற்பங்களில் செதுக்கப்பட் டுள்ளது. புராதன மக்கள் மக்கட் பேற்றிற்கும் மார்ப்கங் களுக்கும் ஏதோ தொடர்புண்டு என முதலில் நினைத்தனர். அதஞலேயே தாய்த்தெய்வங்களைப் பருத்த மார்பகங்கள்ோடு படைத்தனர். குழந்தைகளை வளர்க்கப் பால்வளம்.நிறைய இருத்தல் வேண்டுமென்ற ஆசையையும், இவ்வாறு வெளி யிட்டார்கள். ஆரம்பகால எகிப்திய மருத்துவமும், கிரேக்க அறுவை விஞ்ஞானமும் வளர்ச்சியடையத் தொடங்கிய காலத்தில் குழந்தைப்பேற்றின் காரணங்களையும், அதற்கும் வயிற்றிலுள்ள கருப்பைக்கும் உள்ள தொடர்பையறிந்ததும், தாய்த்தெய்வங்களின் வயிற்றைப் பெரிதாகச் செதுக் கினர்கள். இத்தகைய பழங்காலச் சிற்பங்கள் இக்காலத் திலும் அகப்படுகின்றன. இத்தாய்த் தெய்வங்களின் மகளுகவே வேலன், முருகன் என்ற கருத்தைத் தமிழர்கள் இனக்குழு நிலையில் கற்பனை செய்தார்கள். பண்டைக்காலத் தமிழர் கருத்தில் இத்தெய்வத் எத்தன்மைகள் அல்லது தனிமங்கள் (Elements) கொண்ட தாக இருந்தது? இத்தெய்வத்திற்குச் சில தன்மைகள். குணங்கள், விருப்புகள் உண்டென பண்டைத் தமிழர் கருதினர். அவை வருமாறு : (1) முருகு-மென்மை, நன்மணம், அழகு, தன்ம்ை, முருகுஏறி வெறியாடல். (இது செயல்)

  1. 3