பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களின் முக்கியமான தத்துவப் போக்குகளை இணைத்து @® பிரிவுகள் தோன்றின. அவை நாகார்ச்சுனர் தோற்றுவித்த மாத்யமிக மும் (சூன் வாதம்) மைத்ரேயநாதர் தோற்று வித்த யோகாச்சாரமும் (விஞ்ஞானவாதமும்) ஆகும். இவை பிற்காலத்தில் செல்வாக்குப் பெற்று இந்தியாவிலும் சீனம், கொரியா, ஜப்பான் முதலிய நாடுகளுக்கும் பரவியது. இவற்றுள் முந்தியது கி.பி. 2ஆம் நூற்ருண்டிலும், பிந்தியது கி. பி. 8ஆம் நூற்ருண்டிலும் தோன்றியவை. நாகார்ச்கனர் எழுதிய மாத்யமிகக் காரிகை என்னும் நூலில் மாத்யமிகப் பிரிவினரின் தத்துவக் கோட்பாடுகள், வரையறுத்துத் தர்க்க ரீதியாக விளக்கப்பட்டுள்ளன. இது தேரவாதத்திற்கு முற்றிலும் மாறுபட்டது. தேரவாதி நூல்களான பாலிப் பிடகங்களில் கூதப்படும் ஒழுக்க முறை யான மாத்யமிகத்தை இது தத்துவ இயலாக மாற்றி விளக்குகிறது. தேரவாதம் வாழ்க்கையின் இரண்டு மாறுபட்ட எல்லைகளான புலன் இன்பம் துய்த்தலையும், அதனே முற்றிலும் வெறுத்து கடுந்துறவு வாழ்க்கை வாழ்தல்ை யும் விட்டு நடுப்பாதையாக புலனடக்கத்தையும், தீயன வற்றை விலக்கி நல்லனவற்றை மேற்கொண்டொழுகும் அஷ்டாங்கப் பாதையையும் போதிக்கிறது. ஆல்ை மாத்யமிகம் இத்தகைய நடுப்பாதையை முற்றிலும் வேருன பொருளில் தத்துவ ரீதியில் விளக்குகிறது. (1) ஆத்மா, அனத்மா, (2) உலகமுண்மை, உலகமின்மை (3) நிலைத்தல், நிலையாமை போன்ற முரண்பட்ட கோட்பாடுகளை நிராகரிக் கிறது. உலகம் உண்மை என்ருே உண்மையல்ல என்ருே மாத்யமிகர்கள் ஒப்புக்கொள்வதில்லை. ஆனால் உண்மைகள் தராதரமானதென்றும், ஒன்று கீழானதென்றும், மற்ருென்று மேலானதென்றும், கீழான உண்மை சம்விருத்தி சத்ய கென்றும், மேலான உண்மை பரமார்த்திக சத்யமென்றும் கூறுவர். இவற்றுள் அனுபவ ரீதியான உண்மை சம்விருத்தி சத்யம் அனுபவ எல்லேக்கப்பாற்பட்ட அப்பாலே-உண்மை பரமார்த்திக சத்யம். இல்லாததை உள்ளதென மயங்கும் 7.58