பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேதமையின் படைப்பே சம்விருத்தி சத்யம். உலகனைத்தும் எதிரொலி போல உண்மையில்லாதது என்பதை அறிகின்ற அறிவே பரமார்த்திக சத்தியம். சம்விருத்தி சத்தியத் தின் வழியாகவே பரமார்த்திக சத்யத்தை அறிதல் வேண்டும். முதலாவது பாதையாகும். இரண்டாவது அடைய வேண்டிய குறிக்கோளாகும். முதலாவது பாதை யின் மூலம் உலகை அறிந்து, இரண்டாவது பாதையின் மூலம் உலகம் சூன்யம் என்றறிதல் வேண்டும். இக்கொள்கை எதிர்மறையாகவே விளக்கப்படும். எட்டு வகை எதிர்மறை களால் நாகார்ச்சுனர் தமது தராதர சத்யப்பாதையை விளக்குகிரு.ர். தோற்றமுமில்லை, முடிவுமில்லை. நிலைத்தலுமில்லை, நிலையாமையுமில்லை. ஒருமையுமில்லை, பன்மையுமில்லை. உருவாதலுமில்லை, மறைதலுமில்லை.” இவற்றைக் கடந்து நிற்பது சூன்யம்." சூன்யுதா அல்லது சூன்யம் எல்லையற்றது. நாம்ருப மற்றது. அது ஒன்றே உள்ளது. மற்றவை பேதமையால் சம்விருத்தி சத்யமாக நமக்குப் புலளுகிறது. இதுவே உயர்ந்த உண்மை என்று நிலைநாட்ட நாகார்ச்சுனர் தர்க்கமுறைகளேக் கையாண்டார். அவை: புத்தரால் அருளிய மொழிகள் என்று கருதப்பட்டு வந்த பாலி போதனைகளுக்கு முரணுக இருந்ததால் இக்கொள்கை களை புத்தரோடு இணைக்க வேண்டியிருந்தது. எனவே முன்னர் மேற்கோள் காட்டிய பகுதிகளில் தேவிப்பிரசாத் விளக்கியது போல புத்தர் கூறிய உயர்ந்த, உண்மையாகவே இதனைப் பரப்ப நாகார்ச்சுனர் ஒரு கதையைத் திரித்து விட்டார். அக்கதை வருமாறு : புத்தர் ஒரு சமயம் தமது சிஷ்யர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது புத்தத் தன்மை அல்லது நிர்வாண நிலையடைவது எவ்வளவு கடினமானது 1.59