பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொன்னுன். பின்னர் அவர்கள் வெளியே வந்தது எப்படிச் சரியானது என்பதைத் தெரிந்து கொண்டார்கள். தேரை விளையாடக் கொடுத்தது போலத்தான் முன்னேருதவர்களுக்குக் கீழான ஒரு பாதையையும், பக்குவம் பெற்று அறிந்து கொள்ளுபவர்களுக்கு மேலான ஒரு பாதையையும் புத்தர் வகுத்ததாக நாகார்ச்சுனர் கூறுகிருர், ஆயினும் இரண்டும் ஒரே பாதைதான். முதல் பாதையில் செல்லாமல் இரண்டாவது பாதைக்கு வந்து விடலாம். ஆனல் முதல் பாதையில் செல்லுபவர்கள் இரண்டாவது பாதைக்கு வந்தே தீரவேண்டும். இவற்றைத் தான் ஹீளுயனம் (கீழ்ப்பாதைர் மஹாயனம் (மேல்பாதை) என்று மஹாயணிகள் அழைத்துக் கொண்டார்கள். மேற்கூறியவற்றிலிருந்து சில உண்மைகள் வெளியா கின்றன. தத்துவக் கொள்கைகளிலும், சமயக் கொள்கை களிலும் புத்தரது பழமையான கொள்கைகள் எனப்பட்டவை களிலிருந்து முற்றிலும் மாருனவற்றிற்குப் புத்தரது அங்கீகாரம் பெற நாகார்ச்சுனர் இக்கதையைப் புனைந்தார், புத்தர்கள் பலரென்றும், அவர்களுள் சாக்கியமுனி ஒருவரென்றும் கூறிஞர் அவர் முதன்முதலில் போதித்த எளிய நான்கு உண்மைகளும், எட்டுறுப்புப் பாதையும் மத்தபுத்தியுடையவர்களுக்கும், பக்குவமில்லாதவர்களுக்கும் என்றும், இம்முடைய சூன்யக் கொள்கையும், அப்பாலைத் தத்துவமும், தருக்க நெறியும், கூர்மையான அறிவுடையவர் களுக்கென வும் எழுதிஞர். போதிசத்துவர் என்ற கருத்தை மஹா சங்கிகர்களது லோகோத்தார புத்தர் என்ற கருத்திலிருந்து வளர்த்துக் கொண்டார். மஹாயனத்தின் மற்ருேர் பிரிவினரான யோகாச் சாரரும், தமது கொள்கைகளைப் புத்தரோடு இணைத்துவிட நாகார்ச்சுனரது வழியையே பின் பற்றினர். நிர்வாண | 63