பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலையடைய யோகமே.(தியானம், சித்தன) சிறந்த வழியென்று நடைமுறை ஒழுக்கத்திற்கு அவர்கள் பாதை காட்டினர். இது நடைமுறை வழி. சிந்தனை வழிக்கு அல்லது அப்பாலை அம்சத்திற்கு அவர்கள் விஞ்ஞானம் ஒன்று மட்டுமே உண்மை, மற்றவை தோற்றமென வாதித்தனர். விஞ்ஞானம் என்பது சித்தம் (மனம்). இதுவே உண்மை, உலகமும் உலக நிகழ்ச்சிகளும் தோற்றம் என்பது இவர்களது கொள்கை. அடிப்படை உண்மை சூன்ய மென்ற மாத்யமிகர்கள் கொள்கைக்கு எதிராக இவர்கள் சித்தம் அல்லது விஞ்ஞானம் மட்டுமே உண்மை யென்று கூறுகிரு.ர்கள். தேரவாதம், மஹா சங்கிதம், மஹாயனப் பிரிவுகளான மாத்யமிகம், யோகாச்சாரம் ஆகிய பெளத்த தத்துவ வாதிகள் தமிழ் நாட்டில் சமயப் பிரச்சாரம் செய்து வந்திருக் கின்றனர். இவற்றுள் தேரவாதமே முதன் முதலில் தமிழ் நாட்டில் நுழைந்தது. இதனை ம. சீ. வே. அவர்களுடைய கருத்துக்களோடு உடன்பட்டு முன்னரே குறிப்பிட்டேன். இதனை உறுதிப் படுத்தும் சான்றுகளே மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் தொகுத்துக் கூறுகிரு.ர்கள். 1. அசோகர் காலத்திய அறவெற்றி பற்றிக் கூறும் பாறைச் சாசனங்களே முன்னரே குறிப்பிட்டோம். எனவே கி. மு. 32க்கு முன்னரே தேரவாத பெளத்த பிக்குகள் தமிழ் நாட்டிற்கு வந்து விட்டனர். 2. மகாவம்சம், அசோகரது மகன் அல்லது தம்பி யாகிய மகிந்தரும், அவரது சகோதரி சங்கமித்திரையும் பாடலிபுரத்திலிருந்து இலங்கைக்கு வந்த வரலாற்றைக் கூறுகிறது. அவர்கள் தமிழ் நாட்டின் வழியாகச் சென் றிருக்க வேண்டும் என்ற அனுமானத்தைக் காவிரிப்பூம் பட்டினத்தில் இந்திர விகாரம் இருந்ததென்பதும், அது மகிந்த தேரரால் கட்டப்பட்டது என்ற பாலி மொழி நூலில் காணப்படும் சான்றுகளும் உறுதிப்படுத்துகின்றன. I 63