பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. பாண்டி நாட்டில் மலைக் குகைகளில் பிராமிச் சாசனங்கள் காணப்படுகின்றன. அவை பெளத்த பிக்கு களுக்கு அரசர்களும் தலைவர்களும் அமைத்துக் கொடுத்த கற்படுக்கை தானங்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. ம. சீ. வே. காட்டும் சான்றுகள் போக இன்னும் சில அண்மையில் கிடைத்துள்ளன. - கி. மு. 2ஆம், 1-ஆம் நூற்ருண்டில் செதுக்கப்பட்டவை என ஆராய்ச்சியாளர் கருதும் கல்வெட்டுக்களில் சில தவீரர், தவீரை என்ற பெயர்களைக் குறிப்பிடுகின்றன. 'மா தவீரை கே' (அழகர்மலை 33) "காசயன் தவிர அ' (அழகர்மலை 12) தவிர என்ற தமிழ்ச் சொல் வடமொழி ஸ்தவீரன் என்பதன் திரிபு. தவீரை என்றது. அதுபோலவே ஸ்தவீரை என்ற வட சொல்லுக்குச் சமமானது. இவை புத்த சங்க முதியவனே யும் முதியவர்களையும் குறிக்கும். பிற்கால வழக்கில் இவையே தேரன், தேரினை வழங்கப்பட்டன. எனவே மதுரையைச் சூழ்ந்த இடங்களில் தேரவாத பிக்குகள் இருந்தனரென்பது புலனுகிறது. புத்தரது சீடர்களான மகாகாலிபன், அரிட்டன் முதலியவர்களது பெயர்களைக் கொண்டிருந்தவர்கள் குகை களில் வாழ்ந்தமையை இது காட்டும். உதாரணங்கள்: "எளேயூர் அரிட்டன் பாழி' (கருங்காலக்குடி-28) 'காசயன் அ தவிர அ’ (அழகர்மலை 12) இக்காலத்தில் குறுநில மன்னர்களும், வாணிபர்களும் கற்படுக்கை அமைத்துக் கொடுத்ததையும், இயற்கைக் குகை 召费兹