பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களே உறையுளாகச் செய்து கொடுத்த செய்திகளையுமே பிராமிச் சாசனங்கள் கூறுகின்றன. அப்படியானல் பெரிய விகாரங்கள் கட்டப்படவில்லை என்றே தோன்றுகிறது. பிராமிச் சாசனங்களில் பிற்பட்ட சாசனங்களில் பண்ணகன், பாணித்தி என்ற சொற்கள் காணப்படுகின்றன. இவை மஹா சங்கிகர்களால் தங்கள் சமயத்தைச் சார்ந்தோ ரைக் குறிப்பிடப் பயன்பட்ட சொற்கள். இவற்றிற்கு எடுத்துக் காட்டு சயாமிதா-பாணித்தி பாழி, பள்ளி இரண்டும் ஒரே பொருளில் அக்காலத்தில் வழங்கியிருத்தலால், பெளத்தப் படிமங்களோ, திருவடி நிலை களோ வணக்கத்திற் குரியனவாகவில்லை என்று தோன்று கிறது. ஞானசம்பந்தர், ೧೬6755fಹಶಿ॥ அறுவகைத் தேரர் என்று குறிப்பிடுகிரு.ர். எனவே தேரவாதம் அக்காலத்தில் இருந்ததெனக் கொள்ளலாம். மதுரைக்காஞ்சியில் கடவுளர் பள்ளியைப் பற்றிக் கேள்விப்படுகிருேம். பிக்குணிகள் வணங்கச் சென்றதையும் அந்நூல் விவரிக்கிறது. இங்குத் திருவடி நிலை இருந்ததா, படிம வணக்கம் இருந்ததா என்பது தெரியவில்லை. ஆளுல் நகர்களில் விகாரங்களும், பள்ளிகளும் தோன்றிவிட்டன என்பதையே இது காட்டுகிறது. சிலப்பதிகாரத்திலும் மணி மேகலையிலும் விகாரங்களும் குறிப்பிடப்படுகின்றன. கச்சியின் பெளத்தப் பள்ளி செல்வச் சிறப்புற்று விளங்கி யிருத்தல் வேண்டும். ஆயிரக்கணக்கான பிக்குகளுக்கு வாழ் விடமாகவும், சமயப்பணி செய்வதற்கேற்ற களஞகவும் விளங்கியிருத்தல் வேண்டும். மணிமேகலை சென்றதாகக் கூறப்படும் இடங்களில் எல்லாம் பெளத்தப் பள்ளிகள் இருந்தன. பெளத்த தெய்வங்களுக்குக் கோயில்களும் இருந்தன. முக்கியமாக மணிமேகலை பிற்காலப் பெளத்த த த- 1 覆密5