பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயச் சிறு தெய்வங்களுள் ஒன்று. கதை முழுவதிலும் மணி மேகலையில் காவல் தேவதையாகச் செயல் புரிகிறது. இவை யாவும் பிற்கால வளர்ச்சிப் போக்கினைக் காட்டுகின்றன. ஆளுல் நமது நோக்கம் தருக்கவியல், தத்துவவியல், சமயக் கோட்பாடுகள் ஆகியவற்றில் எவை மணிமேகலையில் காணப்படுகின்றன என்று கண்டு அதன் பெளத்தப் பிரிவு எது என்பதை இனம் காண்பதாகும். எனவே முன்னர் விவரித்த தத்துவ வேறுபாடுகளை மனத்தில் கொண்டு மணிமேகக் யின் பெளத்தச் சார்பு எது என்பதைக் காண முயலுவோம். அறவனவடிகள் மணிமேகலைக்குப் பெளத்த தர்மத்தின் அடிப்படைக் கொள்கைகளே உபதேசிக்கிருர் .நான்கு வாய்மைகள், பன்னிரண்டு நிதானங்கள், அஷ்டாங்கப் பாதை ஆகிய உண்மைகளை அவளுக்குக் கூறுகிருர். நான்கு வாய்மைகள் நோய், நோய் காரணம், நோய் நீக்கும் வாய், நோய் நீக்கும் வழி என்பனவாம். அவற்றைப் பின்வருமாறு மணிமேகலை கூறுகிறது. நோய் உணர்வே அருவுரு வாயில் ஊறே துகர்வே பிறப்பே பிணிமூப்புச் சாவே அவலம் அரற்றுக் கவலே கையாறென துலைப் படுவன நோயாகும்மே. ஐம்புலன்களால் உண்டாகும் பற்றுகள் துன்பம் தருவன. நோய் காரணம் அந்நோய் தனக்குப் பேதைமை செய்கை அவாவே பற்றுக் கரும வீட்டமிவை காரணம் ஆகும். துன்பத்திற்கு நான்கு காரணங்கள் உள்ளன. 星密密