பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவற்றைச் சார்புகள் என்று சாத்தனர் மொழி பெயர்த்து அழைக்கிரு.ர். பேதைமை செய்கை உணர்வே அருவுரு வாயில் ஊறே நுகர்வே வேட்கை பற்றே பவமே தோற்றம் வினைப்பயன், இற்றென வகுத்த இயல்பீராலும் பிறந்தோ ரறியிற் பெரும்பே றறிகுவர். அறியார் ஆயின் ஆழ்நர கறிகுவர், இவ்வடிப்படைக் கருத்துக்கள், பாலி மொழிப்பிடகங்களில் உள்ளனவே. அவற்றைச் சாத்தனர் மொழி பெயர்த்துக் கூறுகிருர் என்று ம, சீ. வே. அவர்கள் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்கள். மண்டிலச் சுழற்சி பற்றிய அடிகள் திரி பிடகத்தின் ஒரு பகுதியான விநயபிடகத்தின் மஹாவக்கம் என்னும் பிரிவில் முதல் காண்டத்தில் உள்ளது. . நான்கு வாய்மைகளும் திரிபிடகத்தில் காணப் படுபவையே. பன்னிரண்டு நிதானங்களில் பொறிகளை இவர் ஐந்தென்றே கூறுகிரு.ர். இவற்றை இவர் வாயில் என்று கருதி, உள்ளம் வாயில்களைச் சார்தலால் அருவுரு என்ற உலகத்தோற்றம் புலப்படுகிறது என்கிரு.ர். மஹாயனிகளில் யோகாசாரர் வாயில்களைச் சடாயாதனம் என்று ஆருகக் கூறுவர். பஞ்சேந்திரியங்களோடு அவர்கள் மனத்தையும் கூட்டிக் கொள்ளுவர். அவர்களிடமிருந்து சாத்தனர் இக் கருத்தில் வேறுபடுகிரு.ர். இவையனைத்திலும் சாத்தளுர் தேரவாதப் பாலிப்பிடகங் களையே பின்பற்றுகிருர். இக் காரணங்களால் இவரைத் & தேரவாதி என்று கூறமுடியுமா? பாலிமொழித் திரிபிடகங்களைப் பெளத்தப் பிரிவினர் எவருமே மறுக்கவில்லை, தங்கள் நூல்களிலும் இவற்றை அவர்கள் ஒப்புக் கொண்டே பேசுகிருர்கள். இந்தியத் 藏琴器