பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவ வரலாற்றில் பழைய கொள்கைகளுக்கு காருன கொள்கைகளைப் பழைய கொள்கைகளைக் கூறும் நூல்களுக்கு உரையாகவே சேர்த்து விடுவதுதான் மரபு, பகவத் கீதைக் கும், பிரம்ம சூத்திரத்திற்கும் உரைகளாகவே, தங்களது புதிய தத்துவங்களேச் சங்கரரும், ராமானுஜரும் மத்வரும் எழுதினர்கள். தாங்கள் புதிய மதங்களின் ஸ்தாபகர்க ளென்று கூறிக் கொள்வதை விட, அநாதிகாலமாக இருக்கும் தத்துவங்களின் உண்மையான விளக்கம் தந்தவர்கள் என்று சொல்லிக் கொள்வதே பயனுடையது என்று நமது தத்துவ ஸ்தாபகர்கள் கருதினர். அது போலவே எல்லாப் பெளத்தப் பிரிவின் ஸ்தாபகர்களும் புத்தர் போதனைகளென்று திரிபிட கத்தில் அடங்கியுள்ள கொள்கைகளை ஒப்புக் கொண்டுதான் அதற்கு மாருண கோட்பாடுகளையும், அவற்றில் காணப்படும் புதிய விளக்கங்களையும் உரைகளாக எழுதி வைத்தனர். தேரவாதிகள் பிரமாணமாகக் கொள்ளும் பாலித் திரிபிட கத்தை அவர்கள் மறுக்கவில்லை. எனவே சாத்தனர் அறவணர் அறவுரையில் திரிபிடகத்தைப் பின்பற்றுவதால் மட்டும் தேரவாதி என்று கூறிவிட முடியாது. இனித் தேரவாதிகளின் பிரமான நூல்களான திரிபிட கத்திற்கு மாருக, பின்வந்த பிரிவினரின் கொள்கைகளோடு சிற்சில தத்துவ அம்சங்களில் சாத்தனர் உடன்படுவதைக் காண்கிருேம். அவற்றைச் சுருக்கமாகக் காண்போம். பேதைமை என்ற தத்துவ வரையறை பற்றிச் சாத்தனர், 1 பேதைமை என்பது யாதென வினவின் ஒதிய இவற்றை உணராது மயங்கி இயற்படு பொருளால் கண்டது மறந்து முயற்கோ டுண்டெனத் தெளிதல்”. திக்நிகாயத்தின் மகாநியாய சுத்தத்தில் (பாலி திரிபிடகத் தின் பகுதி) பேதைமை நிதானங்களுள் ஒன்ருகக் குறிப்பிடப் படவில்லை. பிற்கால நூல்,தம்மசங்கணி என்பது பேதைமை யாவது நால்வகை வாய்மைகளேயும் அறியாமை” என்று

  1. 69