பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரையறை கூறுகிறது. இதைக் குறிப்பிட்ட பின்னும் ந.மு. வேங்கடசாமி நாட்டார், இக்கொள்கை வைதிக சமயத்தி லிருந்து மேற்கொள்ளப்பட்டதெனக் கூறுகிருர். இது தேரவாத நூலல்ல. மஹா சங்கிகர் தோன்றிய காலத்திற் கும் நாகார்ச்சுனருக்கும் இடைப்பட்ட காலத்தது. மஹா சங்கிதர்களது நூலான இலங்காவதாரத்தைப் பின்பற்றித்தான், நுகர்வு, வேட்கை, பற்று என்ற சார்பு கனச் சாத்தஞர் வரையறுக்கிருர், "நுகர்வே புலன்களை உணர்வு நுகர்தல் வேட்கை விரும்பி நுகர்ச்சியா ராமை, பற்றெனப் படுவது பசைஇய அறிவே' புலன்கள் ஐந்தென்பதும், உணர்வு நுகர்வதென்பதும் அது வேறென்பதும் சாத்தனர் கொள்கை. மகாயன பெளத் தர்கள் உணர்வையும் புலன்களோடு சேர்த்துச் சடாயனம் grgot aff, . நிதானங்கள் பன்னிரண்டின் தோற்றமுறை அல்லது 'ஊழின் மண்டிலம் என்பது பெளத்தப் பிரிவினர் அனைவருச் கும் முக்கியமானதோர் கோட்பாடு. இதனைச் சாத்தனர் பின்வருமாறு கூறுகிருர்: பேதைமை சார்வாச் செய்கையாகும் செய்கை சார்வா உணர்ச்சியாகும் உணர்ச்சி சார்வா அருவுருவாகும் அருவுரு சார்வா வாயிலாகும் வாயில் சார்வா ஊருகும்மே ஊறு சார்ந்து நுகர்ச்சியாகும் நுகர்ச்சி சார்ந்து வேட்கையாகும் வேட்கை சார்ந்து பற்ருகும்மே பற்றிற் ருேன்றும் கருமத் தொகுதி கருமத் தொகுதி காரணமாக வருமே ஏன வழிமுறைத் தோற்றம். ፲70