பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f: மூருகன்-இளமை, தெய்வம், தெய்வமேறி ஆடும் வேலன், குறிஞ்சி, பாலைநிலத் தலைவன். (:) வேலன்டவேலப் பிரயோகிக்கத் தெரிந்த விசன் ஸ்கந்தன், கந்தனப் பூசிக்கும் வேலன். முதல்நிலையில் இத்தெய்வக் கருத்து குறிஞ்சி நில வாழ்க்கையில் தோன்றியிருத்தல் வேண்டும். கல் கருவி தாகரிகம் மறைந்து உலோக நாகரிகம் தோன்றி இரண்டும் கலவையாக நில்பெற்றிருந்த காலத்தில் உலோகச் கருவி களுக்கும், அக்கருவியைப் பயன்படுத்துவோருக்கும்!ஏற்பட்ட மதிப்பிளுல், வேலைப் பயன்படுத்தும் ஒரு தெய்வம் பண்டைத் தமிழர் சிந்தனையில் மதிப்புப் பெற்றது. அக்காலத்தில் வேலேத் தாங்கிய பெண் தெய்வங்கள் இருந்ததில்லை. பிற்காலத்திலேயே திரிசூலம் பெண் தெய்வங்களின் ஆயுத அாகக் கருதப்பட்டது. - × . × காலத்தால் முற்பட்ட முதல்நிலைச் சிந்தனையில் தமிழரின் தனிச் சமுதாய வாழ்வின் முத்திர்ையைக் காண்கிருேம். மேலே குறிப்பிட்ட தன்மைகளோடு வேறு சில செய்திகளை யும் மிகப் பழமையான இலக்கியங்களில் காண்கிருேம். தவிையின் காதல் நோயால் மெய்ப்பாடு தோன்றும் பொழுது, தாயும் செவிலியும் அந்நோய் இன்னதென்றறிய வேலனை அழைத்து வெறியாட்டம் நிகழ்த்தி வினவுவர். (தற்காலத்தில் ஏதாவது பேய் பிசாசு பிடித்திருக்கிறதா என்று கேட்க மந்திரவாதிகளே அணுகுவது இத்தகையதோர் தம்பிக்கையின் எச்சமேயாகும்) இதை இனக்குழு மந்திர வாதிகளின் மந்திரவாதச் செயல்களுக்கோ, ஷாமன் என்ற பூசாரிகளின் குலதெய்வ பூசைக்கோ ஒப்பிடலாம். இச் சமயங்களில் ஆடறுத்து, ஆடுகளத்தை மெழுகி, வேலனைத் தருவித்து வெறியாட்டயர்வார்கள். பொதுவாக அவனே வருங்காலம் பற்றி குறி சொல்லுவதோடு மந்திரவாத மருத்துவஞகவும் இருப்பான். இவன்மீது ஏறி இவனே இயக்குவிக்கும் ஆண் தெய்வத்தை முருகு' என்ருர்கள்.