பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றஞ் சார்பின் மூப்புப்பிணி சாக்காடு அவல மரற்றுக் கவலை கையாறெனத் தவலில் துன்பந் தலைவருமென்ப ஊழின் மண்டிலமர்ச் சூழுமிந் நுகர்ச்சி மஹா சங்கிகர்களின் நூலான மஹாவஸ்துவிலும், மஹா யனர்களின் நூலான லவித விஸ்தாரத்திலும் இதேமுறையில் மண்டில வகை கூறப்பட்டுள்ளது. ந. மு. வெ. நாட்டார் மணிமேகலையுரையில் இதனைச் சுட்டிக் காட்டியுள்ளார். 'அவிச்சையைக் காரணமாகக் கொண்டு சம்ஸ்காரமும், சம்ஸ்காரத்தைக் காரணமாகக் கொண்டு விஞ்ஞானமும், விஞ்ஞானத்தைக் காரணமாகக் கொண்டு நாமரூபமும், நாம ரூபத்தைக் காரணமாகக் கொண்டு சடாயதனமும், சடாய தனத்தைக் காரணமாகக் கொண்டு திருஷ்ணையும், திருஷ்ண யைக் காரணமாகக் கொண்டு உபாதானமும் உபாதானத் தைக் காரணமாகக் கொண்டு பவமும், பவத்தைக் காரண மாகக் கொண்டு ஜாதியும், ஜாதியைக் காரணமாகக் கொண்டு பிணிமூப்பு முதலிய துன்பங்களும் தோன்றும், ந. மு. வெ. பெளத்தர்களின் வடநூல்களிலும் இம் முறைவைப்பே காணப்படும் என்று கூறுகிரு.ர். தேரவாத நூல்கள் பாலி மொழி நூல்கள். மஹாசங்கிகர்கள் தனியே பிரிந்த பின்பே வட்மொழியில் பெளத்த நூல்கள் எழுதப் பட்டன . இதை இரு பிரிவினரும் பிற்காலத்தில் பின் பற்றி னர். மகாவஸ்து, லலிதவிஸ்தாரம் தவிர வேறு தேர வாதத்தை எதிர்த்த நூல்களிலும் ஏறக்குறைய இம்முறை வைப்பே காணப்படுகிறது என்பது அவர் கருத்து. இக் கருத்து எனக்கும் உடன்பாடே. அனத்மா அல்லது ஆன்மா இல்லை என்ற கருத்து தேர வாதிகளுக்கும், மஹாசங்கிர்களுக்கும் உடன்பாடே. ஆனல் ஆத்மா, அனத்மா என்ற இரண்டு நி லே க ளே யு ம் நாகார்ச்சுனர் எதிர்க்கிரு.ர். - I 7 I