பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாத்தனர். எப்பொருளுக்கும் ஆன்மா இல்லை" என்று தெளிவாகக் கூறுகிருர். எனவே முக்கியமானதோர் தத்துவக் கோட்பாட்டில் இவர் நாகார்ச்சுனரோடு முரண் படுகிரு.ர். . எனவே தத்துவப் போக்கில் பெரும்பாலும் சாத்தனர் மஹாசங்கிக நூல்களைப் பின்பற்றுகிருர், மஹாயனத்தின் முன் நிலைக் கொள்கைகள் சிலவற்ருேடும் ஒன்று படுகிருர், ஆனல் நாகார்ச்சுனர் கூறும் மாத்யமிகம் என்னும் நடுநிலைப் பாதையையோ, முழுமையான உண்மை, சூன்யம் மட்டும் தான் என்பதையோ இவர் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனல் ந. மு. வே. தமது உரையில் நிதானங்களின் தன்மையைப் பொறுத்தமட்டில் சாத்தனர் நாகார்ச்சுனர் கொள்கையோடு உடன்பட்டுக் கூறுவதாகக் கூறுகிரு.ர். நாகார்ச்சுனர் கூறுவது இரண்டு முரண்பட்ட ஒர நிலைகளையும் மறுப்பதாகும். “No destruction, no production, no discontinuity, no unity, no diversity; no coming, no going.” இது நாகார்ச்சுனர் கூற்று. இது உலகின் இயற்கையைப் பற்றிய இருமாறுபட்ட கருத்துக்களேயும் மறுப்பதாகும். ஆணுல் நிதானங்கள் மாற்றங்களுட்படும். இயங்கியல் நெறிக்கு இந் நிதானங்களே காரணம் என்றும், மாற்றங்கள் இயக்கு சக்தியாகக் கடவுள் போன்றதொன்று தேவை இல்லை என்று கூறிப்படைக்கப்படுதலும், கெடுதலில்லாததும் என்று தொடங்கி வீடுபேற்றுக்குக் காரணமாகத் தானே முதலாகியுமுள்ள இந்நிதானங்கள் என்று தாம் கூறுகிருர், எனவே இருவர் கருத்துக்களும் வெவ்வேறு பொருள்களைப் பற்றிக் கூறுவன. சொல்லொற்றுமையைக் கருத்தொற்றும்ை யாகக் கொள்ளுதல் கூடாது. எனவே மஹாசங்கிகர் களோடும் அதற்குப் பின்னர் தோன்றிய முன்னிலே மஹா யனத்தோடும் ஒன்றுபட்ட தத்துவக் கருத்துக்களைச் சாத்தனர் கூறுகிருர் என்பதை நாம் பார்க்கிருேம், 霞?器