பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனி, சமயக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு மணிமேகலையின் பெளத்தத்தை ஆராய்வோம். பாலி மொழிப் பிடகங்கள் எளிமையான ஒழுக்க முறையையும் தத்துவத்தையும் போதிக்கின்றன. இது ஒரு சமயமாக வளருவதற்குப் போதாது. தெய்வாம்சமான ஒரு ஸ்தாபகரும், அவரது கட்டளைகளும் அ வ சி ய ம் . அவர் மீதும், அவரது கட்டளைகளின் மீதும் விசுவாசத்தையும், பக்தியையும் ஏற்படுத்த வேண்டும். பெளத்த சமயத்திற்கு முன்னரே இந்தியாவில் வேத சமயம் இருந்ததால் அதளுேடு போட்டியிட்டுத் தங்கள் சமயத்திற்கு மனிதனது உலக ஆசைகளே நிறைவேற்றுவதற்கு உதவி புரியும் சில சக்தி களுடைய தெய்வங்களைக் கற்பனை செய்ய வேண்டும். தெய்வீக சக்திகளுடையவராக மத ஸ்தாபகர்களைப் பற்றிய கதைகளைப் புனைய வேண்டும். இவை யாவும் மக்களே இணைத்து சமுதாய முரண்பாடுகளைப் .ெ பா தி ந் தி: மூடுவதற்குப் பயன்படும். இந்த அம்சங்கள் எதுவும் தேரவாதத்தின் ஆரம்பக் கட்டத்தில் இல்லை. இவற்றுள் ஒவ்வொன்ருகப் பிற்கால பெளத்தர்களின் கோட்பாடுகளில் இடம் பெற த் தொடங்கின. மஹாசங்கிகர்களின் மஹாவஸ்து என்ற நூலில் புத்தரைப் பல பிறவிகளில் நற்செயல்கள் புரிந்து தெய்வாம்சம் பெற்ற போதிசத்துவராக வருணித்தார்கள். இருபத்து மூன்று புத்தர்களுக்குப் பின்னர் வரலாற்றுப்புத்தச் தோன்றியதாகக் கூறினர்கள். இவர்களைத் தவிர எண்ணற்ற புத்தர்கள் போதி (ஞானம்) பெற்று அறம் போதிக்காமல் பிறப்பு இறப்பு மண்டிலத்தை ஒழித்தாகவும் கூறிஞர்கள். தேரவாதமும் இக்கதைகளில் சிலவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டி வந்தது. அக்கொள்கையை ஏற்றுக்கொண்ட தேரவாதிகள் சர்வாஸ்திவாதிகள் எனப்பிரிந்தனர். சாக்கிய முனிக்குப் பின் மைத்ரேய புத்தர் என்பவர் உலகில் அவதரிப்பார் என்றும் அவர் துஷித உலகத்தில் இப்பொழுது வாழ்கிருர் என்றும் கூறும் மைத்ரேய வாதிகள் தனியாக ஒரு சமயத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். புத் த ர து 173