பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்பிறப்புக் கதைகள் பல தோன்றின. பல நாட்டுக் கதை கரைப் புத்தரது முற்பிறப்போடு தொடர்பு படுத்தி ஜாதகக் கதைகளாகத் தொகுத்தனர். இவ்வாறு புத்தர் பவிக்கு உணவாகத் தம் உடலைக் கொடுத்த கதையும், புருவின் உயிர் காக்க, புத்தர் உயிர் கொடுத்த கதையும், யானைக் கன்ருகப் பிறந்து வாழ்ந்த கதையும் இவை போன்ற பிற கதைகளும் தொகுக்கப்பட்டு ஜாதக மாலை என்ற பெயரில் கி. பி. 200க்கு அண்மையில் வெளியிடப்பட்டன. வரலாற்று மனிதர் என்ற நினைவு மறந்து போகும்படி செய்யவும், எல்ல்ை பற்ற அறிவுடைய புத்தர் ஒரு ஜன்மத்தில் அந்நிலையை அடைய முடியாதென்றும், பல கோடி ஜன்மங்களில் நல்வினை செய்து முயன்று முடிவில் அந்நிலையை அடைவார் என்றும் காட்ட இக்கதைகள் பயன்பட்டன. புத்தரது பிறப்பும் மனிதர் பிறப்புப் போல கருவாகக் கருப்பையில் வளரும் நிலைகள் இல்லாததென்றும், இயற்கைக்கு அதீதமான நிகழ்ச்சியென்றும் கூறப்பட்டது. மேலும் புத்தரை வணங்கச் சைத்யங்கள் கட்டுவதும் தானம் செய்வதும் நன்னெறிக்கு உய்க்குமென மஹாசங்கிகர்களில் ஒரு பிரிவினரான சைத்யகர்கள் போதித்தனர். இவர்கள் பெளத்தத்தை மக்களின் செல்வாக்குப் பெற்ற சமயமாக்குவதில் தென்னிந் தியாவில் பெரிதும் வெற்றி பெற்றனர். புத்தரைப் பற்றி மணிமேகலைக் கருத்துக்கள் மேற்கூறிய பின்னணியில் தேரவாதக் கருத்துக்களை ஒத்திருக்கின்றனவா அல்லது மஹாசங்கிகர் துவக்கி வைத்து, மஹாயனர் வளர்த்து, பிற்காலத்தில் தேரவாதிகளும் ஒத்துக்கொண்ட கருத்துக்களாகப் புலளுகின்றனவா என்று காண்போம். புத்தர் தோற்றம் பற்றி மணிமேகலை கூறுவது: * அறிவு:வறிதா உயிர்நிறை காலத்து முடிதயங் கமரர் முறைமுறை இரப்ப துடித லோகம் ஒழியத் தோன்றி போதி மூலம் பொருந்தி யிருந்து மாரனே வென்று வீர ஒகி 174