பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குற்றம் மூன்றும் முற்ற வறுக்கும் வாமன் வாய்மை ஏமக் கட்டுரை” துடிதலோகத்தில் வாழ்ந்த போதி சத்துவர், தேவர்கள் உலகில் அறிவு குன்றி விட்டது என்று கூறி உலகில் தோன்ற வேண்டுமெனக் குறையிரப்ப, புத்தர் தோன்றி தீமை புரியத் துரண்டும் மாரனேவென்று போதி மரத்தடியில் ஞானம் பெற்றவராகப் புத்தரை வருணிக்கிறது. இனி இவர் நீண்ட புத்த பரம்பரையில் கடைசியாகத் தோன்றிவர் என்பதை, இறந்த காலத்தெண்னில் புத்தர்களும் சிறந்தருள் கூர்ந்து திருவாய் மொழிந்தது” , பெளத்தம் எண்ணில் காலத்துச் சமயம் என்று காட்டுவதற் காக இறந்த காலத்தில் 'எண்ணில் புத்தர்கள்’ தோன்றிஞர்கள் என்ற மஹாயனக் கருத்து இதில் காணப் படுகிறது. தேரவாதப் பிடகங்கள்,தானே முயன்றுதான் மண்டிலச் சுழற்சியான பிறப்பு இறப்புச் சுழலினின்று விடுபடவேண்டும் என்ற கருத்தில்தான் நான்கு வாய்மைகளையும், அஷ்டாங்கப் பாதையையும் உபதேசிக்கின்றன. யாருடைய அருளும் முயற்சியும் நாம் விடுதலைபெற நமக்கு உதவாது. வழி காட்ட மட்டும் புத்தரால் முடியுமேயன்றி, நமது முன்னேற்றத்திற்கும் நிர்வாணத்திற்கும் நாமே தான் பொறுப்பாவோம். ஆனல் மஹாயனப் பிரிவுகளில் பல புத்தரைக் தெய்வத் தன்மையுடையவராவும் அவரிடம் சரண டைந்து நாம் உதவி பெறலாம் என்றும் கூறுகின்றன. மணிமேகலையில் புத்தரைப் பற்றி இக்கருத்தில் கூறப்படும் பகுதிகள் பலவாகும் ஒரு சில உதாரணங்களைக் காண்போம். 'அருளும் அன்பும் ஆருயி ரோம்பும் ஒருபெரும் பூட்கையு மொழுயா நோன்பிற் uasais:” (மணிமேகலை 3, 59-8) 'இன்பச் செவ்வி மன்பதை யெய்த அருளறம் பூண்ட ஒருபெரும் பூட்கையின் J75