பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலத்தில் மஹாசங்கிகக் கொள்கையும், மஹாயணமும் தமிழ்நாட்டில் பரவி இருத்தல் கூடும். எனவேதான் இச்சமயக் கொள்கைகள் பலவற்றிற்குப் பதிலளிக்கும் முறை யில் பெளத்தம் தமிழ்நாட்டில் புதிய கொள்கைகள் சில வற்றை உருவாக்கி இணைத்துக் கொண்டது. அந்த வளர்ச்சி நிலையில்தான் மணிமேகலையின் பெளத்த சமயக் கோட்பாடு களைக் காண்கிருேம் இனி, மணிமேகலையின் தருக்கநெறிக்கு வருவோம். புத்தர் தருக்கவாதங்களையும், அப்பாலைத் தத்துவ விசாரங் களேயும், வெறுத்து ஒதுக்கினர். ஆத்மா நிலையானதா? உலகம் உண்மையா, தோற்றமா ? மறுபிறப்பின் போது எது ஒர் உடலில் இருந்து வேருெர் உடலுக்குச் செல்லுகிறது? என்ற கேள்விகளுக்கு அவர் விடையளிக்காது மெளன மாகவே இருந்தார் என்று பண்டைய பெளத்த நூல்கள் கூறுகின்றன. - இந்திய நாட்டில் பிராம்மண சமயத்தை எதிர்த்து பெளத்தம் தோன்றியது. பெளத்தம் செல்வாக்குப் பெற்ற பின் பிராம்மணியம் பல பிரிவுகளாகப் பிரிந்து புதிய கொள்கைகளை வகுத்துக் கொண்டு பெளத்தத்தை எதிர்த்தது. பெளத்தம் இத்தாக்குதலுக்குப் பதிலளிக்கத் தானும் பல பிரிவுகளாகப் பிரிந்து சென்று புதிய கொள்கை களை வகுத்துக் கொண்டு தாக்குதல்களுக்கு விடையளித்தது. இப்புதிய நிலைமையில் எதிரிகளோடு விவாதிப்பதற்கு அளவையியலும், அறிவளவையியலும் தேவையாயின. வேறு விதமாகச் சொன்னல் அறிவு தோன்றுகிற முறையையும், விவாதித்து உண்மையை நிறுவுவதற்கு உதவும் தருக்க முறையையும் ஒவ்வொரு சமயமும் தமக்கேற்ற முறையில் உருவாக்கிக் கொள்ள வேண்டியதாயிற்று. எனவே அளவைப் பயிற்சியும், தருக்கவியலும் ஒவ்வொரு தத்துவத் திலும் முக்கியத்துவம் பெற்றன. - - நியாயவாதி மணிமேகலைக்குத் தன் கொள்கையை விளக்கும்போது ஒவ்வொரு தத்துவவாதியும் ஏற்றுக் கொண்ட அளவை உறுப்புக்களைப் பற்றிக் கூறுகிருன் τ77