பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பாங்குறும் உலோகாயதமே பெளத்தம் சாங்கிய தையாயிகம் வைசேடிகம் மீமாம்சகமாஞ் சமய வாசிரியர் தாம் பிரகற்பதி சினனே கபிலன் அக்காதன் கணுதன் சைமினி மெய்யிரத்திய மனுமானஞ் சாத்தம் உவமான மருத்தாபத்திய பாவம் இவையே இப்பொழுதியன்றுள அளவைகள்” நியாயவதி மூன்று ஆசிரியர்களைக் குறிப்பிட்டு ஒவ்வொரு வருக்கும் முறையே பத்து, எட்டு, ஆறு அளவைகள் கொள்கை எனக் கூறுகிருன் அளவை அல்லது தருக்க முறைகளை விவரித்துக் கூறுகிருன். அவற்றில் விளையக்கூடிய ஆபாசங்களே (தவறுகள்) விளக்குகிருன். கடைசியில் மணிமேகலைக் காலத்தில் நிலைத்து வழங்கிய அளவைகளையும் அவற்றில் எவ்வெதனைக் குறிப்பிட்ட சமய வாதிகள். ஒப்புக் கொள்ளுகிருர்கள் என்றும் குறிப்பிடுகிருன். தத்துவம் அன்வை! உலோகாயதம் மெய்பிரத்தியம் (நேர்காட்சி) பெளத்தம் மெய்ப்பிரத்தியம் அனுமானம் சாங்கியம் மேல் இரண்டும் சாத்தமும் தையாயிகம் மேல் மூன்றும் உவமானமும் வைசேடிகம் மேல் நான்கும் அருத்தாபத்தியும் மீமாம்சகம் மேல் ஐந்தும் * அபாவமும் நியாயவாதியின் கூற்றுப்படி பத்து அளவைகளைக் கூறியவன் வேதவியாதன், எட்டு அளவைகளை வகுத்தவன் கிருதகோடி, ஆறு அளவைகளைப் போதித்தவன் சைமினி, இவன் கூறியவற்றுள் பெளத்தர் ஏற்றுக்கொண்டது இரண்டு, 178