பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மையை அறிய பிரத்திகபட்சம், அனுமானம் என்ற இரண்டு அளவைகளேயே அவர்கள் மேற்கொண்டனர். இவை யிரண்டையும் அறவணர் மேற்கொண்டு மணிமேகங்க்கு அறம் போதிக்கின்ருர். ஆனவைகளில் முதலில் காட்சியை வகைப்படுத்தி எடுத்துக்காட்டுகள் கூறி, பின் இம்முறையில் விவாதிப்பதில் ஏற்படும் பிழைகளையும் கூறுகிமூர், அதே போல அனுமானத்தின் வகைகளைக்கூறி எடுத்துக்காட்டு களோடும், பிழைகளையும் சுட்டிக்காட்டுகிருர், இவை யாவும் ஆதிசினேந்திரன் அருளி அளவைகள் என்று சொல்லுகிரு.ர். ஆதிசினேந்திரன் ஆதிபுத்தர். இவை செவிவழி நூலாக இருந்ததாகவும், பின்னர் எழுதப்பட்டது என்னும் கருத்தில் இவ்வாறு கூறுகிருர், உண்மையில் மஹாசங்கிகர்களின் பிரிவுக்குப் பின்னர் பெளத்தர்களது அளவைக் கருத்துக்கள் படிப்படியாகத் தோன்றி திக் நாகர், (5ம் நூற்ருண்டு) காலத்தில் அவருடைய நூல்களால் முழுமை பெற்றன. ஆதிசினேந்திரன் அளவை நூல் அருளி: தாகக் கூறுவது தமது சமயச் சார்புள்ள தருக்கம் புராதன மானது என்ற பொய்யை உண்மையாகக் காட்டுவதற் காகவே. - உண்மையில் தமிழரான தின்னுகரே பெளத்தி தருக்க வீயவின் முதன்மையான ஆசிரியராவார். இவரைப் பற்றி பாரத்சிங் உபாத்யாயா கூறுவதாவது : 'பெளத்த திருக்க வியல் வரலாற்றில் முதன்மையான பெய்ர் தின்னுகராகும். இவர்தான் பெளத்த தருக்கவியலின் தந்தையாவார். இந்திய நடுக்கால நியாயநூலின் பிதாவும் இவரே. இவரைப் பின்பற்றியே பல நியாய நூல்கள் எழுந்தன. சில நூல்கள் இவரது கொள்கைகளை எதிர்க்கவும் எழுந்தன. ஆயினும் இந்திய நாட்டின் தலைசிறந்த அளவை நூற் புலவர் இவர் என்பதில் ஐயமில்லை. இவரது பெயரைக் குறிப்பீடாத அளவை நூல் இவரது காலத்திற்குப் பின் இல்லை யெனலாம், ’’ . - தமிழர் திபெத்தி நூல்கள் இ வ. ர து வ ர லா ற றைக் கூறுகின்றன. காஞ்சியின் அருகிலுள்ள சிம்ம 179