பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விக்ரத்தில் இவர் பிறந்தார். பிராம்மண குலத்தில் பிறந்தவ ராதலால் வேத நூல்களையும், நியாயத்தையும் கற்றுணர்ந்தார். பின்னர் ஹீனயன பெளத்த பிக்குவாளுர், தமது ஆசிரியரோடு மனம் வேறுபட்டு நாளந்தாவிற்குச் சென்ருர். அங்கு வசுபந்து என்ற புகழ் பெற்ற மஹாயன விஞ்ஞானவாத பெளத்த ஆசாரியரையடைந்து அவரது மாணவரானர். இவர் மஹாயன நூல்கள் பலவற்றிற்கு உரை எழுதினர். திபெத்தியச் சான்றுகளின்படி இவர் நூற்றுக்கு மேற்பட்ட தருக்க நூல்களே எழுதினராம். இவற்றுள் இன்றும் நிலைத்திருப்பவை பிரமான சமுச்சயம், நியாயப் பிரவேசம், ஹேதுசாகர தமரு, பிரமான சாஸ்திர நியாயப் பிரவேசம், ஆலம்பன பரீட்சை முதலியன. இவர் ஐந்தாம் நூற்ருண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்தவர் என்று திபெத்தியச் சான்றுகளிலிருந்து ஆராய்ச்சியாளர்கள் முடிவுக்கு வருகிருர்கள். இவரது மாணவர்களில் சிலர் புகழ் பெற்ற அளவை நூலாசிரியர்களாக விளங்கியுள்ளனர். சங்கர சுவாமி, தருமபாலர் முதலியவர்கள் நாளந்தாவில் ஆசிரியர்களாக இருந்திருக்கிரு.ர்கள். தின்ஞகரைப் பின்பற்றி அளவை நூலே வளர்த்தவர் தர்மகீர்த்தி இவரும் தமிழரே. சோழ நாட்டில் பிறந்தவர். ஷெர்பாட்ஸ்கி என்னும் ரஷியப் பேராசிரியர் இவரை இந்தியாவின் கான்ட் (Kant) என்று அழைக்கிருர். அவரது விவாதத் திறமையை அவரது விரோதிகளான பிராமண நியாயவாதிகளும் ஒப்புக் கொண்டுள்ளனர். இவர் ஆரும் நூற்ருண்டில் வாழ்ந்தவர். இவர் தின்னுகரின் மாணவரான ஈஸ்வர சேனரிடம் தருக்கவியலைக் கற்ருர். நாளந்தாவிற்குச் சென்று அங்குச் சங்கத் தலைவராக இருந்த தருமபாலரிடம் பெளத்த விஞ்ஞானவாத நூல்களைக் கற்ருர். (தர்மபாலரும் தமிழரே). தின்னகர் சம்ஸ்கிருதத்தில் எழுதிய நூல்கள் இப்பொழுது வழக்கொழிந்து போய்விட்டன. ஆயினும் அவை திபெத்திய மொழி பெயர்ப்பில் இருப்பதை ராகுல் சாங்கிருத்தியாயன் கண்டுபிடித்து வெளியிட்டுள்ளார். அவருடைய நூல்களில் முக்கியமானவை: 'பிரமாண i83