பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தற்காலத்தில் கூட அழகிய ஆண்மகன மோகினி என்ற பெண் பிசாசு பற்றிக் கொள்ளும் என்றும். அப்பொழுது அவனது ஆண்மையும், பீடுநடையும் மாறும் என்றும், வேலனைப் போன்ற பூசாரிகளை அழைத்து ஆண் தெய்வங் களைக் களத்தில் வரவழைத்தால், மோகினி மலையேறும் என்றும் நாட்டுப்புற நம்பிக்கையொன்றுள்ளது. முருக வணக்கத்தின் அடிப்படையும் ஏறக்குறைய அது போன்றதே. துன்புறுத்தும் தெய்வத்தைக் கொடை கொடுத்துச் சாந்தி செய்வது இப்பூசாரிகளின் நோக்கம். கருக்கல் வேளைகளில் மோகினி இருப்பதாக நம்பப்படும் தோட்டங்களுக்கு இளைஞர்கள் போகக்கூடாது என எச்சரிப்பதை நாம் அறிவோம். இதுபோலவே வங்காளத்தில் முருகளுன கார்த்திகேயன் கோயிலுக்கு மணமாகாத பெண்கள் செல்லக் கூடாது. மோகினியை ஆண்கள் பற்றிக் கொள்வது போல, கார்த்திகேயன் பெண்களைப் பற்றிக் கொள்வான் என்ற நம்பிக்கை இன்றும் உள்ளது. வெறியாட்டு பற்றிய மேற் கூறிய கருத்துக்களுக்குச் சில சான்றுகளே சங்க இலக்கியங் களிலிருந்து தருவோம். முருகயர்ந்து வந்த முதுவாய் வேல ! (குறுந்தொகை 362) (முருகென்ற தெய்வம் உன் உடலுள் ஏறப்பெற்று வெறியாடி வந்த வேலனே :) ஊர்முது வேலன் கழங்கு மெய்ப்படுத்து கண்ணன் துக்கி முருகென மொழியு மாயின், (காதல் நோயால் வாடும் ஒருத்திக்கு வேலன் வந்து வெறியாடி எத்தெய்வத்தின் குற்றமெனக் கூற வந்தவன் முருகின் குற்றமெனக் கூறுவாயிைன்இது தலைவி கூற்று) வெறிபுரி ஏதில் வேலன் கோடை துயில் வரத்துங்கும் ஆயின், 幂等